வருகின்ற சனிக்கிழமை, October 7, 2017 அன்று நடைபெற இருக்கும் செல்வி
பிரணவி பிரபானந்தனின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை உலகெங்கும் இருந்து Live Stream மூலம் பார்த்து இரசிக்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. Toronto,
Canada நேரப்படி மாலை 5 மணி அளவில் Live Stream ஆரம்பிக்க உள்ளது. கீழுள்ள
இணைப்புக்குச் செல்வதன் மூலம் இந்த நிகழ்வை நீங்கள் பார்க்கத்
தவறாதீர்கள்.
Thursday, October 5, 2017
Tuesday, October 3, 2017
உசன் அபிவிருத்திக்கான நிதி சேகரிப்பு
அன்பார்ந்த உசன் மக்களே!
ஒரு கிராமத்தின் பெருமை அதன் வளர்ச்சியில் தங்கியுள்ளது. அந்த வளர்ச்சி கிராமத்தின் கட்டுமாணத்தில் தங்கியுள்ளது. பாடசாலை, கோவில், கடைகள், வீதிகள், போக்குவரத்து போன்றவற்றோடு வாசிகசாலை அல்லது நூலகம் என்பதும் கிராம வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.
இதனை அடிப்படையாக வைத்து உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையோடு ஆரம்பிக்கப்பட்ட நூலக வேலைகள் 2014 ஆம் ஆண்டு தை மாதம் "பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்" என்ற பெயருடன் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. அமரர் பண்டிதர் சரவணமுத்து அவர்களின் மக்கள் சுசீலாதேவி சுகுணேஸ்வரன் அவர்கள் தனது வீட்டை நூலகத்துக்காக வழங்கியிருந்தார். இந்த நூலகத்தைச் சிறப்பாக நடத்துவதற்காகப் பலரும் நூல்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தனர். பின்னர் மின்னிணைப்பு, இணையத் தொடர்பு என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. நூலகத்தைச் சரிவர நடத்தவும், அது அமைந்துள்ள வீட்டைப் பராமரிக்கவும் என உசன் சனசமூக நிலையம் உருவாக்கப்பட்டு அதன் கீழ் இந்த நூலகம் பதிவு செய்யப்பட்டது. கூடவே இரு பணியாளர்களும் அமர்த்தப்பட்டனர்.
இவற்றுக்கான செலவு மாதமொன்றுக்கு CDN $300.00 ஆக இருக்கிறது. இதன் மிகப் பெரும் பகுதியை குறிப்பிட்ட கனடா வாழ் உசன் மக்கள் வருடந்தோறும் வழங்கி வந்தனர். தொடர்ந்தும் இந்தச் செலவை அவர்கள் மேல் சுமத்துவது நாகரீகமாகாது என்ற நிலையில் இந்தச் செலவுக்கான வருமானத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. அதனடிப்படையில் உசன் சனசமூக நிலைய நிர்வாகத்தினரின் ஆலோசனைக்கிணங்க மாதம் CDN $300.00 வட்டியாக வரக்கூடிய பணத்தைச் சேகரித்து நிரந்தர வைப்பிலிடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தனியே நூலகச் செலவுக்காகப் பணத்தைச் சேகரிக்காமல் எதிர்கால உசன் அபிவிருத்திக்குமாகப் பணத்தைச் சேகரிப்பது சிறந்தது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் CDN $50,000.00 ஐ இலக்காகக் கொண்டு நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பலரும் முன்வந்து தமது பங்களிப்பைச் செய்து வருகின்றனர். இந்த நிதி சேகரிப்பின் முதற்கட்டமாக Rs. 1,000,000.00 (அண்ணளவாக CDN $10,000.00) சேகரிக்கப்பட்டு உசன் சனசமூக நிலையத்திடம் கடந்த சனிக்கிழமை அன்று கையளிக்கப்டுள்ளது. இலக்கை எட்டுவதற்கான மிகுதி பணத்தை அனைத்துலக வாழ் உசன் மக்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். கூடிய விரைவில் இந்த இலக்கை எட்டவேண்டிய தேவை உள்ளதால் உங்கள் பங்களிப்பை உடனடியாக எதிர்பார்க்கிறோம்.
இந்த நிதி சேகரிப்புக்குப் பொறுப்பாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பில் பத்மகாந்தன் சரவணமுத்து அவர்கள் நியமிக்கப்பட்டுளார். அவரோடு pathman.s1@hotmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது +1-647-219-2027 என்ற செல்லிடப்பேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு உங்களின் பங்கைளிப்பை வழங்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு வேண்டி நிற்கிறது. மேலதிகமாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் தலைவர் பாஸ்கரன் சுப்பிரமணியம் அவர்களோடு president@usan.ca என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது +1-647-448-7434 என்ற செல்லிடப்பேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இந்த இரண்டு இலக்கங்களிலும் Viber அல்லது WhatsApp மூலமாகவும் தொடர்பு கொள்ள முடியும்.
உங்களின் பங்களிப்புக்கு பற்றுச் சீட்டு வழங்கப்படும். உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா Ontario மாகாணத்தில் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம் வாழ் அன்பார்ந்த உசன் மக்களே தேவையறிந்து இந்த உதவியைச் செய்ய முன் வருமாறு உசன் சனசமூக நிலையம் மற்றும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ஆகியன கேட்டுக்கொள்கின்றன.
|
President
|
|
Monday, October 2, 2017
பரதநாட்டிய அரங்கேற்றம்
பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரத கலா வித்தகர், நாட்டிய சிரோன்மணி திருமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவிகள் செல்வி Kashvie Shankar மற்றும் செல்வி Ashmie Shankar ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் October மாதம் 8 ஆம் திகதி, 2017 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை அன்று 50 Hallcrown Place, Toronto, Ontario, M2J 1P6, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Armenian Youth Centre இல் மாலை 5:00 மணிக்கு இடம்பெற உள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு திருமதி சியாமா தயாளன் அவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்.
இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.
|
President
|
|
Saturday, September 30, 2017
மிருசுவிலை சேர்ந்த திரு.தட்சணாமூர்த்தி குமாரசுவாமி அவர்களின் மரண அறிவித்தல்.
மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா ஒட்டாவா மற்றும் மிசிசாகாவை வதிமிடமாகவும் கொண்ட திரு. தட்சணாமூர்த்தி குமாரசுவாமி அவர்ககள் செப்ரெம்பர். 30ம் திகதி சனிக்கிழமை கனடாவில் சிவபதம் எய்தினார்.
அன்னர் காலஞ்சென்ற குமாரசுவாமி மற்றும் காலஞ்சென்ற உமையம்மாவின் அன்பு மகனும், காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, சதாசிவமூர்த்தி சாகச்சேரி இலங்கை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வைத்தியர் பூமகளின் அன்புக் கணவரும், சதீஸ், துஷ்யந்தி, மைதிலி, சங்கீதாவின் அன்புத் தந்தையும், பிரணவன், நாவலன், சாகரி, சாயித்திரி, கவின், கஜானனன் மற்றும் சேஷானின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல், ஓக்டோபர் முதலாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணி வரை, இலக்கம் 121 City View Dr Etobicoke, ON M9W 5A8 முகவரியில் அமைந்துள்ளள "லோட்டஸ் Funeral Home "ல் பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை அதே இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதேநாள் காலை 10 மணி முதல் 12 மணிவரை தகனக் கிரியைகள் செய்யப்பட்டடு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தமது ஆழ்த்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன் .
அன்னாரின் ஆத்மா உசன் முருகன் பாதங்களில் சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் . இந்த தகவலை உசன் மக்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம் .
தகவல் :
சங்கீதா மகள், சங்கர் மருமகன்
சதீஸ்மகன், றோகினி மருமகள்
துஷ்யந்தி மகள், றவி மருமகன்
மைதிலி மகள், கஜன் மருமகன்

Anonymous
|
|
Tuesday, September 26, 2017
கனடாவில் செல்வி பிரணவி பிரபானந்தன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் ....
உசனைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி வெற்றிவேலு தம்பதிகளின் பேத்தியும், கனடா வாழ் திரு. திருமதி பிரபானந்தன் இந்திரா தம்பதிகளின் ஏக புதல்வியுமான செல்வி பிரணவி பிரபானந்தன் பரதக்கலையை முறையே பயின்று அரங்கேற்றம் செய்யவுள்ளார்.
செல்வி பிரணவி கனடாவில் பிறந்து பலவருடங்களாகப் பரதக்கலையை முறைப்படி பயின்று வருகிறார். Toronto வில் பிரபலமான, முதன்மை பரதநாட்டிய நிலையமான "சதங்கை நர்த்தனாலயத்தில்"
பரதக்கலை வித்தகர் வாசு சின்னராசா அவர்களைக் குருவாக ஏற்று பரதக் கலையைப் பயின்று வந்துள்ளார்.
பரதநாட்டியக் கலையை முழுமையாகப் பயின்ற பூரிப்பில் தனது நாட்டியத் திறமையைக் குருவுக்கும், பெற்றோருக்கும், கலை இரசிகர்களுக்கும், பெரியோர்களுக்கும் வெளிப்படுத்தும் விதத்தில் தனது குருவின் ஆசியுடன் இசைக் கலைஞர்கள் புடை சூழ அரங்கேற்றம் செய்யவுள்ளார்.

October மாதம் 7 ம் திகதி 2017 ஆம் ஆண்டு, சனிக்கிழமை, மாலை 5 மணிக்கு, Toronto வில் சிறந்த ஒலி, ஒளி அமைப்புமிக்க அரங்கமாக விளங்கும், 10268 Yonge St, Richmond Hill, ON L4C 3B7 என்ற முகவரியில் அமைத்துள்ள, Richmond Hill Center For The Performing Arts அரங்கத்தில் இந் நிகழ்வு நடைபெறவுள்ளது. செல்வி பிரணவியின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வில் கனடா வாழ் அனைத்து உசன் மக்களையும், உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்களையும், பரதக்கலை இரசிகர்களையும் கலந்துகொண்டு செல்வியை ஆசீர்வதிக்குமாறு பெற்றோர்களான திரு. திருமதி பிரபானந்தன் இந்திரா தம்பதிகள் அன்புடன் அழைக்கின்றனர்.

கனடாவில் பரதக்கலை பயின்று அரங்கேற்றம் காணும் இன்னுமொரு உசன் பரத தாரகையை வாழ்த்துவதில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பெருமை கொள்கிறது.
கனடா வாழ் உசன் மக்கள் அனைவரையும் இந்த அரகேற்ற நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
இந்த அரங்கேற்றம் சிறப்பாக நடக்க எமது வாழ்த்துக்களும், உசன் முருகன் அருளும் கிடைக்க வேண்டுகிறோம்.
தொடர்புகளுக்கு :
பிரபா - +16472217307
இந்திரா - +14168847307
|
Anonymous
|
|
Subscribe to:
Posts (Atom)