அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, June 10, 2018

திருமதி பசுபதிஅம்மா வேலாயுதபிள்ளை




உசனைச் சேர்ந்த திருமதி உதயகுமாரி தயாபரன் (உதயா) அவர்களின் மாமியார் காலமானார்.

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட 
பசுபதிஅம்மா வேலாயுதபிள்ளை அவர்கள் 07-06-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை(முன்னாள் சிறைச்சாலை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஜெயராஜா, ஜெயராணி மற்றும் மகேந்திரன், பத்மராணி(ராசாத்தி), சந்திரயோகினி(ரயினி), தயாபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதிஅம்மா, மகேஸ்வரிஅம்மா, காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணரத்தினம், ரேணுகாதேவி, நித்தியானந்தம், சரவணமுத்து, உதயகுமாரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெயந்தன், அபிராமி, கோபு, பாபு, பிரபு, ரமணன், ராகவன், ரமணி, கிருஷ்ணா, கணேன், அகிலா, அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ரேயா, ஏரன், மீரா, விஷ்ணு, மைலி, மாறன், அஞ்சலி, ஜெனனி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/06/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine, Avenue Markham, ON L3R 5G1, Canada 

பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 11/06/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada 

கிரியை
திகதி: திங்கட்கிழமை 11/06/2018, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada 

தகனம்
திகதி: திங்கட்கிழமை 11/06/2018, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0, Canada 

தொடர்புகளுக்கு
தயாபரன் — கனடா
தொலைபேசி: +14162990836

அபிராமி — கனடா
செல்லிடப்பேசி: +19052390419

ராகவன் — கனடா
தொலைபேசி: +16474000963

இந்த அறிவித்தல் www.kallarai.com என்ற இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.

அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Sunday, June 3, 2018

வருடாந்தப் பொதுக்கூட்டமும், ஒன்றுகூடலும்


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடாந்தப் பொதுக் கூட்டத்துக்கும், கோடை கால ஒன்றுகூடலுக்கும் உங்களை அன்போடு அழைக்கிறது.

திகதி: சனிக்கிழமை, June 30, 2018.

ஆரம்பநேரம்: காலை 11 மணி அளவில். (நிகழ்ச்சி ஆரம்பமாவதற்குப் போதிய மக்கள் வந்தவுடன் ஆரம்பமாகும்.)

இடம்:  Neilson Park (1555 Neilson Rd, Scarborough, ON M1B 5Z7, Canada)
Closest intersection: Neilson Road and Finch Avenue.

முதலில் பொதுக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து உணவுப் பரிமாற்றமும், விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெறும்.

பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஒன்றியத்தின் செயற்பாடுகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதுடன், அதன் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்குமாறு உசன் மக்கள் அனைவரையும் அன்போடு வேண்டுகிறோம்.

இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்புவோர் நிர்வாகசபையோடு தொடர்பு கொள்ளவும்.

இந்த நிகழ்வில் தொண்டர்களாகச் சேவையாற்ற விரும்புவோரும் தயவுசெய்து நிர்வாகசபையோடு  தொடர்பு கொள்ளவும்.

நன்றி.

பாஸ்கரன் சுப்பிரமணியம்
தலைவர்,
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


General Meeting and Summer Get Together

United People Association of Usan in Canada cordially invites you to it's annual general meeting and Summer get together.

Date:  Saturday, June 30, 2018.

Starting time:  11 a.m. (Event will start as soon as enough people arrive.)

Venue: Neilson Park (1555 Neilson Rd, Scarborough, ON M1B 5Z7, Canada)
Closest intersection: Neilson Road and Finch Avenue.

General meeting will take place first followed by food and sports meet.

You are requested to attend the general meeting and provide your opinion on the activities of the association.  Also give your suggestions on what direction this association should take in the future.

Anyone who are interested in sponsoring this event, please contact the Executive committee.

We are always looking for volunteers to assist in this event.  Interested individuals please contact the Executive committee.

Thank you.

Baskaran Subramaniam
President,
United People Association of Usan in Canada.


Wednesday, May 23, 2018

கார்த்திகேசு முருகேசு

 
உசனைச் சேர்ந்த கார்த்திகேசு முருகேசு அவர்கள் May 20, 2018 அன்று உசனில் இறைவனடி எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு - நாகமுத்து தம்பதிகளின் மூத்த மகனும்,

May 16, 2018 அன்று இறையடி சேர்ந்த அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

ரகுநாதன் (கனடா), வதனா (உசன்), கமலநாதன் (வட்டுக்கோட்டை) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

காலஞ்சென்ற விநாசித்தம்பி, காலஞ்சென்ற திருமதி முத்துப்பிள்ளை மார்க்கண்டு, மற்றும் சிவயோகநாதன் (நீர்வேலி), ராமநாதன் (கனடா) ஆகியோரின் மூத்த சகோதரனும்,

பரமநாதன் (ஆழ்கடலான்) அவர்களின் மைத்துனரும் ஆவார்.

இறுதிக் கிரியைகள் May 25, 2018, வெள்ளிக்கிழமை அன்று பகல் 12 மணி அளவில் உசனில் இடம்பெறும்.

தொடர்புகளுக்கு:
ரகுநாதன் - +1-416-786-1843
ராமநாதன் - +1-416-299-6763

கார்த்திகேசு முருகேசு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது.


Wednesday, May 16, 2018

திருமதி அன்னபூரணம் முருகேசு


அன்னபூரணம் முருகேசு அவர்கள் 16-05-2018 அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் கார்த்திகேசு முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,

ரகுநாதன் (கனடா), வதனா (உசன்), கமலநாதன் (வட்டுக்கோட்டை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 17-05-2018, வியாழக்கிழமை அன்று உசனில் நடைபெறும்.

அன்னபூரணம் முருகேசு அவர்களின் ஆத்ம சாந்திக்காக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் பிரார்த்திக்கிறது.



Tuesday, May 15, 2018

உசன் கந்தசாமி கோவில்
வருடாந்த திருவிழா


உசன் கந்தசாமி கோவிலின் வருடாந்த திருவிழா நடைபெறும் விளம்பி வருடம், வைகாசி மாதம் 6ஆம் நாள், ஞாயிறுக்கிழமை (20-05-2018) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கவுள்ளது.  தேர்த்திருவிழா 28-05-2018 அன்றும், தீர்த்தத் திருவிழா 29-05-2018 அன்றும் சிறப்பாக நடைபெற உள்ளது.

மேலதிக தகவல்கள் திருவிழா குறித்த பிரசுரத்தில் உள்ளது.