அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, May 29, 2006

"உசன்பதி முத்துமாலை" நூல் வெளியீடு


உசன் கிராமத்தின் வரலாறுகளையும் பண்பாட்டு விழுமியங்களையும்,கடந்துவந்த நிகழ்வுகளையும் பொக்கிசமாக்கும் முயற்சியின் முதல் படியாக திருமதி.சின்னத்தங்கம் சரவணமுத்து (பண்டிதர் அம்மா)அவர்களால் "உசன்பதி  முத்து மாலை" எனும் நூல்உருவாக்கப்பட்டது .

இதன் வெளியீட்டு விழா ,2006 வைகாசி கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. உசன்   இராமநாதன்    மகாவித்தியாலய பழைய மாணவர்கள் ,கல்விமான்கள் ,கனடா வாழ் உசன் மக்கள் என பலரும் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.



Sunday, September 21, 1980

உசன் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் நடத்தும் கண்காட்சியும் விற்பனையும்

இடம்:யா/உசன் இராமநாதன் மகாவித்தியாலயம்
காலம்;20-09-80 சனிக்கிழமை காலை 9-00 மணி
தலைவர்:திருவாளர் துரைராசாஅவர்கள்(உதவி அரசங்க அதிபர்,சாவகச்சேரி)
பிரதம விருந்தினர்;உயர்திரு.N.P.ஜெகநாதன் அவர்கள்(மேலதிக அரசங்க அதிபர்)
சிறப்பு விருந்தினர்:திரு.M.சுப்பிரமணியம் அவர்கள் (உதவி அரசங்க அதிபர்,கச்சேரி)
திருS .முருகவேல் அவர்கள் (உதவி அரசாங்க அதிபரும் மிருசுவில் கி.ச.விசேட ஆணையாளரும்)
முதற்பொருளை விற்பவர்:திரு.எஸ்.விசுவலிங்கம் அவர்கள் (சிறு கைத்தொழில் உதவி ஆணையாளர்)
முதற்பொருளை வாங்குபவர்:திரு.சி.நவரத்தினம் அவர்கள் (சமூக மணி,தொழிலதிபர்,-சாவகச்சேரி)
வரவேற்புரை:திருமதி அ.சூசைமரியதாசன் (தலைவி,உசன் மா.மு.சங்கம்)
கருத்துரைகள்:செல்வி சி.வேலுப்பிள்ளை (செயலாளர்,உசன் மாதர் கி.அ.ச.)திரு .மு.க.சிவானந்தம் அவர்கள் (தலைவர் கிராம அபிவிருத்திச்சங்கம்)
திரு .பே.சிவபாதசுந்தரம் அவர்கள் (தலவர் சனசமூக நிலையம்),
திரு.சி.தயாபரன் அவர்கள் (தலைவர்,உசன் இளைஞர் ஒன்றியம்)
விற்பனைப்பொருட்கள்:*சிறுபிள்ளைகளுக்குரிய உடைகள்,*தலையணை உரை,*எம்றோய்டறி பாவாடைகள்,*கால்மீதி,*தும்புத்தடி,*அடுக்குப்பெட்டிகள்,*சுளகு,அலங்க்காரப்பொருள்கள்.

அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்