அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, September 14, 2009

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தளர்த்த ஆளுநர் இணக்கம் தெரிவிப்பு

யாழ் குடாநாட்டில் பாதுகாப்புத் தேவைகளுக்காக ஏற்னவே மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பொதுமக்களது வசதி கருதி நீக்குவது, தளர்த்துவது மற்றும் குறைப்பது குறித்து வடமாகாண ஆளுனர் மேஜர் ஜீ.ஏ.சந்திரசிறியுடனான சந்திப்பின்போது இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற ஆளுனருடனான சந்திப்பின்போது, யாழ். அரசாங்க அதிபர் கே. கணேஷ், டக்ளஸ் மற்றும் பொது மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காக 79 கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதனன்று யாழ் நூலகக் கட்டிடத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது, தீவகப் பகுதி உட்பட யாழ் பிரதேச மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவற்றில் சில முக்கிய விடயங்கள் பற்றி, விரைவில் யாழ் கடற்படை கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலின் பிரகாரம், குடாநாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ள பொதுமக்களின் கோரிக்கைகள்
*கச்சாய் துறைமுக வீதியிலுள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் பாவனைக்காகத் திறத்தல்
*கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள கச்சாய் பாதையோர முட்கம்பிகளை அகற்றல்.
*உசன் - கெற்பேலி வீதியை மக்கள் போக்குவரத்திற்காகத் திறத்தல்
*உசன் இராமநாதன் கல்லூரிக்குரிய காணியை விடுவித்தல்,

கரம்பகம், எழுதுமட்டுவாழ், ஒட்டுவெளி, நாகர்கோவில், மருதங்கேணி ஆகிய பகுதிகளில் கண்ணிவெடிகள் உடன் அகற்றப்பட்டு மக்களை மீள்குடியேற்றுதல்

என்பனவற்றுக்குகான இணக்கம் காணப்பட்டது .


Monday, November 17, 2008

உசனுக்கோர் "நாவல்லர்" பண்டிதர் திரு.சி.சரவணமுத்து


உசனில் பிறந்து உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கல்விபயின்று ஆசிரிய பணியையும் மேற்கொண்ட பண்டிதர்  திரு.சி. சரவணமுத்து அவர்கள் சாவகச்சேரி டிறிபேக் ,சண்டிலிப்பாய்,ஹெரனை.களுவாஞ்சிகுடி கொழும்பு .போன்ற இடங்களின் கல்வி கற்பித்து பின் தான் கல்விகற்ற உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் ஆசிரிய பணி செய்யும்  வாய்ப்பை பெற்றார்.  உசன் பாடசாலையில் நீண்டகாலம் பணியாற்றி இளைப்பாறினார்.
  இவர் கல்வித்துறையில் பண்டிதர்,வித்துவான்,சைவப்புலவர் என்னும் மூன்று பட்டங்களை பெற்றுக்கொண்டார்.அது போல்  இல்வாழ்க்கையிலும் மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானார். கடமையில் கண்ணியமாகவும் நேர்மையாகவும் வாழ்ந்தவர் பண்டிதர் சி சரவணமுத்து அவர்கள்.
                                                           தற்போது ஐக்கிய அமெரிக்காவில் தனது இளைய மகளின் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் இவருக்கு. இவரிடம் கல்விபயின்ற மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவரின் மகத்தான சேவையை பாராட்டி 2008 ம் ஆண்டு. கனடாவில் நடந்த குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வில்.
உசனுக்கோர் "நாவல்லர்"  என்னும் பட்டம் வழங்கி கௌரவித்தனர்.
 இன் நிகழ்வில் இவரிடம் கல்விபயின்று பட்டதாரியான திருமதி .பு.விஜயகுமாரி
சிறப்புரை வழங்க .வைத்திய கலாநிதி Dr .இந்திரன் ஆசிர்வாதம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
                                                             பண்டிதர் சி சரவணமுத்து அவர்கள் நீடூடிகாலம்
சீரும் சிறப்புடனும் வாழ  உலகில் வாழும் அவரிடம் கல்விபயின்ற  அனைத்து மாணவர்களும் வாழ்த்துகின்றனர்.


Wednesday, March 26, 2008

உசன் படை நிலைகள் மீது புலிகள் பீரங்கி தாக்குதல்

உசன் படை நிலைகள் மீது புலிகள் பீரங்கி தாக்குதல்
இன்று இரவு எழுது மட்டுவாள் உசன் சிங்கள இராணுவ படை நிலைகள் மீது புலிகள் ஏவிய எறிகனைகள் வீழந்து வெடித்துள்ளன.
இவ் தகவலை படை நிலைகளிற்குள்அருகில் உள்ள சிலர் கலகத்திற்கு
தெரிவித்துள்ளனர்.அவா்கள் மேலும் கூறியாவது தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய கனரக பீராங்கி எறிகணைகள் படையினரின் முகாம் மற்றும் இராணுவநிலைகள் மீது விழுந்ததாகவும். இதனால் அங்கிருந்த மக்களும் படையினரும் வேறிடங்களுக்கு நகர்ந்ததாகவும் தெரிவிக்கபடுகிறது.


Sunday, September 2, 2007

"வளம் கோழிக்க உளம் செழிக்கு உசன் வரலாறு" நூல் வெளியீடு

உசன் கிராமத்தின் வராலாறுகளை. எதிகால சந்ததிக்கு தருவிக்கவும்,அதனை ஆவணமாக்கி உசன் வரலாறை  உலகமே அறியும் முகமாக, அதிபர் திரு.க.பேரம்பலம் அவர்களின் அயராத முயற்சியில் உருப்பெற்ற "வளம் கோழிக்க உளம் செழிக்கு உசன் வரலாறு"  எனும் நூல் வெளியீடு 02 .09 .2007 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலய மண்ணடபத்தில் . மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
                                முன்னாள் உதவிகல்வி பணிப்பாளர் திரு.சி.இராஜநாயகம் தலைமையில் நடந்த இன் நிகழ்வில் பிரதமவிருந்தினரக மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி திரு. க. மாணிக்கம் அவர்களும் சிறப்புவிருந்தினராக
தென்மராட்சி பிரதேச செயலர் திரு.சே.ஸ்ரீநிவாசன் மற்றும் தென்மராட்சி கல்விப் பணிப்பாளர் திருவாட்டி  அ. வேதநாயகம் அவர்களும் கலந்து கொண்டனர் .
பெருந்திரளான உசன் மக்களின் ஆதரவுடன் நடைபெற்ற  இன் நிகழ்வில் தென்மராட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர் .


Monday, May 29, 2006

"உசன்பதி முத்துமாலை" நூல் வெளியீடு


உசன் கிராமத்தின் வரலாறுகளையும் பண்பாட்டு விழுமியங்களையும்,கடந்துவந்த நிகழ்வுகளையும் பொக்கிசமாக்கும் முயற்சியின் முதல் படியாக திருமதி.சின்னத்தங்கம் சரவணமுத்து (பண்டிதர் அம்மா)அவர்களால் "உசன்பதி  முத்து மாலை" எனும் நூல்உருவாக்கப்பட்டது .

இதன் வெளியீட்டு விழா ,2006 வைகாசி கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. உசன்   இராமநாதன்    மகாவித்தியாலய பழைய மாணவர்கள் ,கல்விமான்கள் ,கனடா வாழ் உசன் மக்கள் என பலரும் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.