அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, May 13, 2013

உசன் கந்தசுவாமி கோவில் வருடாந்த திருவிழா 2013


உசன் கந்த சுவாமி கோவிலின் வருடாந்த திருவிழா எதிர்வரும்  15.5.2013 புதன்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது .
தேர் திருவிழா 23.05.2013 வியாழக்கிழமையும் நடைபெறவுள்ளது .
ஆலயத்தால் வெளியிடப்பட்ட  மஹோற்சப விஞ்ஞாபனம்
விபரம்


Saturday, May 11, 2013

"உசன் பாடசாலைக்கு கிடைத்தது " Photo copy Machine "

உசன் இராமநாதன் மஹா வித்தியாலய நிர்வாகம் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்திடம் விடுத்திருந்த அவசர தேவைகள் குறித்த விபரம் அனைத்துலக உசன் பாடசாலை பழைய மாணவர்களிடம் எமது ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தோம் .ஆனால்
 அனைவரும் மௌனம் சாதித்தே  வந்தனர்
இருப்பினும் கனடா தவிர்ந்த வெளிநாட்டில் வாழும் உசன் பாடசாலை பழைய மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து ஒரே வழிநடத்தலில்  பாடசாலைக்கு உதவ முன்வருவதாக கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியத்துக்கு தெரிவித்து . ஒரு வார காலத்துக்குள் பாடசாலைக்கு தேவையான  Photo copy Machine க்கு உரிய
பெறுமதி இலங்கை ரூபா 150 000 உசனில் உள்ள அபிவிருத்தி கட்டமைப்பின்
பொதுவான கணக்கிலக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு
பாடசாலை நிர்வாகம் ஊடாக இயந்திரம் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .
இந்த முயற்சிக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்துக்கு முன்வந்து ஊக்கம் தந்து உழைத்தவர்கள் மற்றும் பங்களிப்பு செய்த பழைய மாணவர்கள் குறித்த மேலதிக விபரங்கள் மிக விரைவில் வெளியடப்படும் .

"ஒன்றிணைந்தால் எமது பாடசாலையை மீண்டும் பழைய நிலைக்கு
     உயர்த்த முடியும் "



Friday, April 26, 2013

திருமதி.செல்லாச்சி இராமலிங்கம் அவர்களின் மரண அறிவித்தல்


உசன் பண்டிதர் சரவணமுத்து பொதுநூலக நிர்வாகசபை தலைவர்
திரு.இ.முருகதாசன் அவர்களின் அன்புத் தாயார்
திருமதி.செல்லாச்சி இராமலிங்கம் அவர்கள்  ஏப்பிரல் மாதம் 4 ம் திகதி
உசனில் காலமானார் .
    அன்னார் திரு.இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் முருகதாசன்
அவர்களின் அன்புத்தாயாரும் , சர்மிளா அவர்களின் மாமியாரும்
மற்றும் ஜதுர்சன் தனுசிகன் ஆகியோரின் பாசமிகு  பேத்தியாரும் ஆவார் .

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் உசனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனம் செய்யப்பட்டது .
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் ,

அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மசாந்தியடைய  அனைத்துலக உசன் மக்கள் சார்பாக வேண்டுகிறோம் .

தகவல் : மகன் , முருகதாசன்- உசன் 94771320013




Monday, April 22, 2013

உசன் பாடசாலை நிர்வாகம் விடுக்கும் அவசர உபகரண உதவி

பல கல்விமான்களை உருவாக்கி உலகெல்லாம் உங்களை வாழவைத்துக்கொண்டிருக்கும் உங்கள் கல்வித்தாய், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், உங்களிடம் அவசர உபகரண உதவி வேண்டி நிற்கிறது.

இந்த காலகட்டத்தில் பல நவீன உபகரணங்களை யாழ் மாவட்டத்தின் பல பாடசாலைகளும் பயன்படுத்தி வரும் நிலையில், கிராமப்புறத்தில் இருக்கும் எமது படசாலைக்கு உதவிகள் மிக அரிதாகவே கிடைக்கிறது. அதிலும் கல்வி அமைச்சிடம் கேட்கப்படும் உதவிகளுக்குக்கூட மிக நீண்ட காலம் தாழ்த்தியே பதில் தரப்படுகிறது. இந்த நிலையில் எமது மாணவர்களின் கல்வியையும் மற்றைய பாடசாலைகளின் தரத்திற்கு கொண்டுவருவதற்கு உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகிறது. எமது தேவையை நாம் உங்களிடம் மட்டுமே உரிமையுடன் கேட்க முடியும். நீங்கள் எமது பிள்ளைகள். எனவே எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு இப்போது அவசரமாகத் தேவைப்படும்
1. Photo Copy Machine
2. Multimedia Projector
ஆகியவற்றைத் தந்துதவுமாறு வேண்டுகிறோம்.

இவற்றின் அண்ணளவான பெறுமதி
1. Photo Copy Machine ...... Rs.150,000.00
2. Multimedia Projector ...... Rs.95,000.00

எமது பாடசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருபவர்கள் எம்முடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறோம்.

அஜந்தன் வெற்றிவேலு (பொருளாளர்- கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்) +1-416-833-2120
த.சோதிலிங்கம் (அதிபர் -உசன் இராமநாதன் மஹா வித்தியாலயம்) +94-77-370-0155
"என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு"