அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, June 28, 2013

மரண அறிவித்தல்

உசனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா சரவணமுத்து அவர்கள் 28.06.2013, வெள்ளிக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற வினாசித்தம்பி - சின்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு - ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சரவணமுத்து அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற நவமணி, காமாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தலக்குமி, ஸ்ரீகாந்தன் (இத்தாலி), நந்தலக்குமி (இலங்கை), தனலக்குமி (ஆசிரியர் - விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயம்), பத்மகாந்தன் (கனடா), ஜீவகாந்தன் (இத்தாலி), முருகானந்தன் (பொறியியலாளர் - அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்புத் தாயும்,

செல்லத்துரை, காலஞ்சென்ற ஞானதேவி, சந்திராதேவி, சுந்தரலிங்கம் (ஓய்வு பெற்ற தபாலதிபர்), யோகராசா (ஆசிரியர் - இடைக்குறிச்சி சுப்பிரமணியம் வித்தியாலயம்), சிவசோதி (கனடா), லதா (இத்தாலி), அனுசா (அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்பு மாமியும்,

ஜசிதலா, ராஜாராம் (அவுஸ்திரேலியா), யதிகேசன் (IDM, சாவகச்சேரி, ராஜீவ், சுஜிதா (இத்தாலி), கஜிதா, காண்டீபன், ரஜீவனா - கஜரூபன் (பட்டதாரி பயிலுனர்கள்), தினேஸ் (HNDE மட்டக்குளி), விதுசன், வேணுசன், வைஸ்ணவி, மயூரன் (கனடா), மீனுஜா (கனடா), தணிகேசன் (அவுஸ்திரேலியா), தாரணி (அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மதுமிதா, (அவுஸ்திரேலியா), கரிஸ்ராம் (அவுஸ்திரேலியா), அக்சிகா (இத்தாலி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 30.06.32013, ஞாயிற்றுக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று, பி. ப. 1 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக ஈச்சங்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
பத்மகாந்தன்(இலங்கை)+94774862626
பத்மகாந்தன்(கனடா)+19058030204
முருகானந்தன்+94778155501
ஸ்ரீகாந்தன்+94774289740
ஜீவகாந்தன்+393471941009


Wednesday, June 26, 2013

உசனில் உதயமாகியது "பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்"


கடந்த வருட காலமாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும், உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் மற்றும் உசன் இளையோரும், மேற்கொண்ட அயராத முயற்சியின் பயனாக உசனில் உருவாகியது "பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்".
பல தடைகளை கடந்து உண்மையான உசன் உணர்வாளர்களின் முயற்சியில், உசன் இளையவர்களின் அர்ப்பணிப்பில் உருவாக்கம் பெற்று இன்று வணக்கத்துக்குரிய சிவ ஸ்ரீ கேதீஸ்வர குருக்களின் ஆசிர்வாத பூசையைத் தொடர்ந்து, நூலக நிர்வாகசபையின் புதிய தலைவர் திருமதி மீரா தேவரஞ்சன் அவர்களும், முன்னாள் விஞ்ஞான ஆசிரியர் திரு. ஸ்ரீகாந்தன், மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோர் மங்கள விளக்கேற்ற, உசன் வாழ் எதிர்கால சந்ததி மேல் பற்று கொண்ட மக்களும், உசன் பாடசாலை மாணவர்களும் கலந்திருக்க "பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்" உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.


அடிப்படை வசதியுடன் தினசரிப்பத்திரிகை உடன் மட்டுமே ஆரம்பிக்கப்பட இந்த நூலகத்துக்கு முன்னாள் விஞ்ஞான ஆசிரியர் திரு. ஸ்ரீகாந்தன், உசன் பாடசாலை முன்னாள் அதிபர் திரு. பேரம்பலம் அவர்களின் மகள் திருமதி துஸ்யந்தி மிகுந்தன் ஆகியோர் மட்டுமே பத்திரிகை நன்கொடை வழங்க முன்வந்துள்ளனர்.
இருப்பினும் இதனை முழுமையான நூலகமாக மாற்ற எமக்கு இன்னும் ஆதரவும், உதவிகளும் தேவைபடுகிறது. அனைத்துலகிலும் வாழும் நல்லுள்ளம் கொண்ட உசன் வாழ் மக்கள் தயவு செய்து உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

இந்த நூலகத்துக்கு தினசரி பத்திரிகை, வாராந்த பத்திரிகை, ஆங்கில பத்திரிகை, மற்றும் வாராந்த, மாதாந்த சஞ்சிகைகள், அதைவிட ஒரு அலுவலக பணியாளர் வேதனம், ஒரு நிர்வாக பாதுகாவலர் வேதனம் ஆகியற்றுக்கான உதவிகள் தேவைபப்டுகிறன. உசன் கல்வியறிவை, உங்கள் குடும்பமாக நினைத்து உதவி புரியுமாறு உசன் வாழ் மக்கள் சார்பாக வேண்டுகிறோம். எம் உசன் ஊர் மீது பற்றுள்ளவர்கள் உடனடியாக எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

நன்றியுடன்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா செயலாளர் திரு. சுப்பிரமணியம் பாஸ்கரன்
+1 647 448 7434


Sunday, June 23, 2013

உசன் நூலக பணிக்கு அவசர பண உதவி தேவை.....


அன்பான அனைத்துலக உசன் வாழ் மக்களே!

கடந்த 3 வருட காலமாக கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய நிர்வாகசபை உசன் கிராமத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சி செய்தது. இதற்கு உசன் மேல் பற்றுள்ள பலரும் கை கொடுத்தனர். அத்தோடு பல நிறுவனங்களும் உசன் அபிவிருத்திக்கு உதவத் தயாராக இருந்தன. இருப்பினும் சர்வதேச பொது நிறுவனங்களின் வேண்டுகோள் என்னவெனில், ஒரு திட்டத்தை செயற்படுத்தி காட்டினால் அது குறித்து அவர்கள் தமது உதவியை எமது உசன் மக்களுக்கு வழங்க முடியும் என்பதே. இதனை எமக்கு உதவி புரியும் சில அன்பர்களுக்கு தெரிவித்தோம்.
அதன் அடிப்படையில் வந்ததே "உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்". இப்பொழுது பல இடர்களுக்கு மத்தியில் இராணுவக் கட்டுபாட்டில் இருந்த அந்த வீட்டை மீட்டு சிரமதானம் செய்து இயங்குவற்குத் தயார் நிலையில் உள்ளது. எமது திட்டப்படி இந்த நூலகத்தை இயக்க பண உதவி தேவைப்படுகிறது. கனடா வாழ் மக்களிடம் சேர்க்கப்பட்ட பணத்தை கொண்டு கட்டிட புனரமைப்பு முடிவடைந்த நிலையில் தொடர்ந்தும் கனடா வாழ் மக்களே உசன் புனரமைப்பில் பங்களிப்பு செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

அன்பான அனைத்துலக உசன் வாழ் மக்களே! உங்களால் முடிந்த சிறிய உதவியையேனும் எமக்கு வழங்கினால் எமது பணியைத் தொடர முடியம். இல்லையேல் பல சிரமங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி இடை நடுவில் நின்று போகும் அவலம் ஏற்படும். எனவே இந்த அவசர தேவைக்கு உங்களால் முடிந்த உதவியை மிக விரைவாகச் செய்யுமாறு அன்போடு வேண்டி நிற்கிறது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா. ஒன்றியத்தின் செயலாளர் பாஸ்கரன் அவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு இந்த நற்பணியை நீங்கள் ஆற்ற முடியும்.

உங்களின் பங்களிப்பு இன்றி ஒன்றியத்தால் எதுவும் செய்ய முடியாது. இதுவரை செய்த எல்லா முயற்சிகளும் பயனற்றுப்போக விட்டுவிடாதீர்கள். அது மட்டுமன்றி நாம் சர்வதேச நிறுவனங்களுடன் பேசி கேட்ட உதவிகளும் கிடைக்காமல் போக இடமளியாதீர்கள். எமக்கு பல வழிகளில் அனைத்துலக நாடுகளில் இருந்து பல உசன் அன்பர்களின் முயற்சியால் அந்த நாட்டு அரசாங்க தரப்பில் இருந்தும் உசன் அபிவிருத்திக்கு உதவிகள் கிடைக்கவிருந்தன. ஆனால் நாம் முதலில் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் ஒரு செயற்திட்டத்தைச் செய்துமுடிக்க வேண்டும். அதற்கு இந்த "பண்டிதர் சரவணமுத்து பொது நூலக" திட்டத்தைச் செயற்பபடுத்திக் காட்டுவோம், வாருங்கள்.

நோர்வே வாழ் திரு. அம்பலவாணர் ஜெயதேவன் அவர்கள் உசனில் உருவாக்க முயற்சித்த முதியோர் நலன் காப்பகம் உசன் மக்களின் பங்களிப்பின்மை காரணமாக இடையில் நின்றுபோயுள்ளது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். தவிர அவரின் பல இலட்சம் பணமும் தேக்கமான நிலையில் உள்ளது. இந்த நிதி மிக விரைவில் கொடிகாமத்துக்கு சேரவுள்ளது என்றும் அறிகிறோம். இந்த நிலை தொடர இடமளியாதீர்கள்.

நன்றி

தொடர்புகளுக்கு:
செயலாளர் பாஸ்கரன்: +1 647 448 7434


Wednesday, June 19, 2013

இரங்கல் மடல்

திரு. குகதாஸ் கேதீஸ்வரதாஸ் அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் வாழ் உசன் மக்கள் சார்பாக Dubeni Jegasoothy அனுப்பியுள்ள இரங்கல் மடலை இங்கே வெளியிடுகிறோம்.
உசன் மக்கள் ஐக்கிய ஒன்றியம் - கனடா


Sunday, June 16, 2013

மரண அறிவித்தல்.

உசனைப் பிறப்பிடமாகக் கொண்ட குகதாஸ் கேதீஸ்வரதாஸ் (ஈசா) அவர்கள் காலமானார்.

அன்னார் குகதாஸ் - சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
கலாவதியின் பாசமிகு கணவனும், ஹம்ஷிகா, விபூஷணா, பிரியங்கா ஆகியோரின் ஆசை அப்பாவும்,
கமலதாஸ், சிவதாஸ், விமலதாஸ் ஆகியோரின் அருமைச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக் கிரியைகள் June 17, 2013 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:
சிவானந்தன் +1-905-554-2014