உசன் ஐக்கிய நாணய சங்கம் தங்களின் தேவைக்கென ஒரு கட்டிடம் அமைக்கத் தீர்மானித்துள்ளதென்றும், அதற்கான நிதி உதவிக்கான கோரிக்கையை சங்கத்தின் மூத்த உறுப்பினர்களின் பிள்ளைகளிடம் விடுவதென்றும், இந்த வேண்டுகோளை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் ஊடகங்களில் பிரசுரித்து உதவுமாறும் அச் சங்கத்தின் சார்பில் திரு.க.பேரம்பலம் அவர்கள் கேட்டிருக்கிறார். அவரின் வேண்டுகோளை இங்கே பிரசுரிக்கிறோம்.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
______________________________________________________________________
இச்சங்கத்தின் நோக்கம்: புகையிலைச் செய்கை, நெற்செய்கை போன்ற தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்குக் குறைந்த வட்டிக்குக் கடன் கொடுத்தல்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அமரர் மு. சி. சிற்றம்பலம் அவர்களால் 1947 ஆம் ஆண்டு இந்தச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. 68 ஆண்டுகளாகியும் சொந்தக் கட்டிடம் இல்லாத குறையை நிவர்த்தி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்துக்குரிய ஒரு பரப்புக் காணியை உசன் கந்தசாமி கோவில் தர்மகர்த்தா திரு கு. விமலதாஸ் அவர்கள் வழங்கியுள்ளார். இந்தக் கட்டிடத்தைக் கட்டி முடிப்பதற்கு Rs. 12,00,000.00 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியை சங்க மூத்த அங்கத்தவர்களின் நினைவாக அவர்தம் பிள்ளைகளின் அன்பளிப்பின் மூலம் பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேரன்புடையீர்!
மேற்படி சங்கம் இன்றும் 26 அங்கத்தவர்களுக்குக் குறைந்த வட்டியுடன் தலா Rs. 20,000.00 கடன் கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாது கடந்த காலங்களில் பல சமூக சேவைகளையும் செய்துள்ளது. யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் ஒரு கல்வி வளர்ச்சி நிதியத்தை ஆரம்பித்து ஆண்டுதோறும் பரீட்சை பெறுபேறுகளில் முதன்மை காட்டும் மாணவர்களுக்கு நிதியத்தின் வட்டி மூலம் நிதி உதவிகளையும் செய்து வருகிறது.
எனவே இந்த நற்பணி செவ்வனே நிறைவு பெற உங்களின் பேருதவியை நாடி நிற்கிறோம். பின்வரும் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதன் மூலம் உங்களின் நிதி உதவியைச் செய்ய முடியும்.
வங்கியின் பெயர்: National Savings Bank (NSB), Chavakachcheri
கணக்கிலக்கம்: 100730209406
மேலதிக தொடர்புகளுக்கு:
திரு.க.பேரம்பலம் +94213737079 / +9421222404
நன்றி
உசன் ஐக்கிய நாணய சங்கம் சார்பாக திரு.க.பேரம்பலம்
Tuesday, April 28, 2015
Monday, April 27, 2015
உசனில் நடைபெறவிருக்கும் பிரமாண்ட விழா
உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகத்தின் 55 ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு , கழக உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் துரித திட்டங்களின் ஆரம்பநிகழ்வும் ," முதுசம்" நூல் வெளியீட்டு விழாவும்
எதிர்வரும் 30.04.2015 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு , சிறப்பாக நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது .
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக .வட மாகாண கௌரவ முதல்வர் அவர்களும்.மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்,
இன் நிகழ்வில் அனைத்து மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறும் ,
உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகத்தின் . துரித திட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம் .
இன் நிகழ்வு சிறப்புற நடைபெற கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது .
|
Anonymous
|
|
Wednesday, April 22, 2015
உசன் விளையாட்டு வீரர்களின் அதிரடி ஆட்டம்
வரலாற்றில் முதல் தடவையாக வெளிநாடு ஒன்றில் எமது உசன் மைந்தர்கள் நிகழ்த்திய விளையாட்டு சாதனையாக பதிவு பெற்ற South Asian Badminton Tournament 2015 போட்டி .
மிக குறுகிய காலத்தில் சிறந்த வழி காட்டலுடன் பயிற்சி பெற்ற எமது உசன் வீரர்கள் . மிகவும் சவால் மிக்க அணியினரை தக்க மதி நுட்பத்துடனும் தீரத்ததுடனும் எதிர்கொண்டு வெற்றி பெற்றனர் , அதில் சில காட்சி பதிவுகள்
முதல் பதிவு

Monday, April 20, 2015
அஜந்தன் வெற்றிவேலு அவர்களுக்குப் பாராட்டு
Tamil Canadian Sports Association ஆல் March 14, 2015 அன்று Markham Pan-Am Center இல் நடாத்தப்பட்ட 3ஆவது ஆண்டு பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் Uan Sports Club இன் சார்பில் பலர் கலந்துகொண்டு வெற்றிக் கேடயங்களைப் பெற்றுக்கொண்டார்கள். இந்த நிகழ்வைச் சிறப்பாக நடாத்தி முடிக்க உதவிய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் உப செயலாளர் அஜந்தன் வெற்றிவேலு அவர்களுக்கு Markham நகர சபையில் ஒரு விளையாட்டு அமைப்பை உருவாக்கி மிக குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சி பெற திறம்பட செயல்பட்டமைக்கும் அவரின் சேவையைப் பாராட்டி Markham நகர பிதாவும், அங்கத்தவர்களும் பாராட்டுப் பத்திரம் வழங்கி மதிப்பளித்தனர்.
அஜந்தன் வெற்றிவேலு அவர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும் அதன் உறுப்பினர்கள் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
அஜந்தன் வெற்றிவேலு அவர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும் அதன் உறுப்பினர்கள் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
|
Baskaran
|
|
Sunday, April 19, 2015
DECA International Career Development Conference
Canadian-Usan students are participating in this year's DECA International Career Development Conference. Shankith Umapathy and Gokulan Sivakumar are preparing for this grand event. More than 10,000 members are expected in this event showcasing their knowledge and skills. Gokulan has recently participated in the Badminton Tournament held in UK organized by World Tamil Badminton Federation and he was the champion in his age category.
DECA Ontario is Canada's largest youth business organization. Their mission is to be the leading, innovative extra-curricular program for secondary school students in Ontario by creating professional partnerships and experiential learning opportunities that allow students to develop confidence, employability skills and demonstrate leadership.
More and more schools are recognizing DECA as a great way for students to get prepared for ‘the real world’. Students are mentored by DECA's strongest leaders and guided by it's most supportive corporate and community sponsors enabling them with the motivation, skills, and education they need to pursue a line of business. DECA dives into a world beyond textbooks through role-plays, community projects, leadership programs, and international networking.
DECA is also an identified component of the Specialist High Skills Major (SHSM) program. Through experiential programming, students are given many reach ahead opportunities that they can apply to their SHSM designation on their OSSD.
DECA has about 100 categories to choose from and develop your skills for your future career. DECA holds Provincial, Regional and International competitions. This year's DECA International Career Development Conference will be held at Orange County Convention Center, Orlando, Florida between April 25 and April 28.
United People Association of Usan in Canada is joining it's members wishing Shankith and Gokulan a successful event and a great career.
For more details about DECA please visit www.deca.ca

Subscribe to:
Posts (Atom)