அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, August 9, 2015

கனடாவாழ் உசன் மக்களின் கோடை கால ஒன்றுகூடலும், பொதுச் சபைக் கூட்டமும்

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் ஏற்பாட்டில் நடைபெறும் கனடா வாழ் உசன் மக்களின் கோடைகால ஒன்றுகூடலுடன் கூடிய பொதுச் சபைக் கூடத்துக்கு இன்னும் இருப்பது ஒரு வாரம் மட்டுமே.

இந்தக் கோடை கால ஒன்றுகூடலும், வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டமும் ஞாயிற்றுக் கிழமை, August மாதம் 16 ஆம் திகதி இடம்பெற உள்ளது. Scarborough நகரில் Neilson Road மற்றும் Finch Avenue சந்திக்கு அருகாமையில் அமைந்திருக்கும் Neilson Park இல் இந்த நிகழ்வு இடம்பெறும்.

நாள் முழுவதும் சுண்டல் கடலை, கொத்து ரொட்டி, குழைசாதம், BBQ உட்பட்ட பல வகையான உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட உள்ள இந்த நிகழ்வில் அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டியும் இடம்பெறும். விசேட நிகழ்வாக கயிறிழுத்தல் போட்டி இடம்பெற உள்ளது. இதற்கான தரம் வாய்ந்த கயிறு இலங்கையிலிருந்து விசேடமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கயிறிழுத்தல் போட்டி சம்பந்தமாக ஒன்றியத்தின் உப செயலாளர் வெற்றிவேலு அஜந்தன் கருத்துத் தெரிவித்தபோது, "உசன் மக்களுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதற்காக இந்தக் கயிறு இலங்கையிலிருந்து விசேடமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கையிற்றை முகநூலில் பார்த்த பலரும் என்னை அழைத்து இதை வாடகைக்குத் தர முடியுமா என்று கேட்கின்றனர். இந்தப் புத்தம் புதிய கயிறு இந்த வருட ஒன்றுகூடலில் ஒரு காட்சிப் பொருளாகப் போகிறது" என்று பெருமிதத்தோடு கூறினார். இது தவிர மற்றுமொரு போட்டியாக 10 வயதுக்கு உட்பட்ட சிறுவருக்கான வினோத உடைப் போட்டியும் இடம்பெற உள்ளது.

இந்த வருடாந்த நிகழ்வு குறித்து உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் திரு. கனகசபை நகுலன் அவர்களிடம் கருத்துக் கேட்டபோது, "வழமை போன்று இந்த வருடமும் இந்த ஒன்றுகூடல் சிறப்பாக அமையும்" என்று நம்பிக்கை தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "ஒரு அமைப்பின் வளர்ச்சி அதன் உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றத்திலேயே தங்கியுள்ளது. எனவே பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிர்வாகசபையின் காலம் அடுத்த வருட கோடைகால ஒன்றுகூடலுடன் முடிவுக்கு வருகிறது என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு உற்சாகம் தரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கனடா வாழ் உசன் மக்கள், மற்றும் உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், அயற்கிராம மக்கள் அனைவரையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கிறது.

இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்குபவர்கள்:
HomeLife Today Realty Ltd. - RAMANAN RAMACHANDRAN BROKER OF RECORD. www.homelife.ca
J.B.N. Auto Sales - Karuna www.jbnautosales.com
White Horse Travel www.whitehorsetravels.com
Debt Free Credit Solution - Keeran www.totaldebtfree.ca
Royal Brokers - Siva Kandiah http://www.royalbrokers.com
Priyalatha Satkunanathan
Oppilamany Vijayaroopan

அனுசரணை வழங்கும் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை உங்கள் தேவைகளுக்கு இவர்களை நாடுமாறு உசன் மக்களையும், மற்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.


Friday, August 7, 2015

திரு சின்னத்தம்பி பொன்னையா

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் உப தலைவர் சரவணமுத்து பத்மகாந்தன் அவர்களின் மாமனார் சின்னத்தம்பி பொன்னையா அவர்கள் August 07, 2015 வெள்ளிக்கிழமை அன்று முருகன் கழலடி சேர்ந்தார்.

இவர் கொடிகாமம் மந்துவில் தாவளை இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், கண்டாவளை பத்தன்மோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஞானம்பலவாணர்(ராசா- சுவிஸ்), சிவசோதி(கனடா), சிவநேசன்(கனடா), ரவிக்குமார்(ரவி- சுவிஸ்), சிவராணி(யசோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கணபதிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை(குஞ்சம்மா), ஆறுமுகம்(இளையதம்பி), மற்றும் சின்னப்பிள்ளை(செல்லம்மா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருப்பூங்கோதை(சுவிஸ்), பத்மகாந்தன்(கனடா), பகீரதி(கனடா), புவனேஸ்வரி(புவனா- சுவிஸ்), சிவராசா(சிறி- கொடிகாமம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஸ்கந்தகுமார் கமலாதேவி அவர்களின் அன்பு மைத்துனரும்,

சுஜீவன் கார்திகாயினி(சுவிஸ்), ரஜீவன் காயத்திரி(சுவிஸ்), மயூரன்(கனடா), மீனுயா(கனடா), ரவீனன்(சுவிஸ்), ரானுஷா(சுவிஸ்), துர்க்கா(கனடா), லதீசன்(கனடா), பிரதீசன்(கனடா), லக்சன்(கனடா), சானுசன், தனுசன், கானுயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சைலன், லக்ஸ்மன், அஸ்லின், கயலின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் மடத்தடிலேன் கொடிகாமத்திலுள்ள மகள் யசோ அவர்களின் இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிக்கிரியை ஆகஸ்ட் 09, 2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணி்யளவில் நடைபெற்று பின்னர் கொடிகாமம் கட்டப்பறிச்சான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
மருமகன் பத்மகாந்தன் (பத்மன்)

தொடர்புகளுக்கு:
ஞானம்பலவாணர் — சுவிட்சர்லாந்து+41332217536
ரவிக்குமார் — சுவிட்சர்லாந்து+41315344454
சிவசோதி — கனடா+19058030204
சிவநேசன் — கனடா+16474012538
யசோ — இலங்கை+94773621166
சிறி — இலங்கை+94772784730
வாணர் — இலங்கை+94771133375


கனடா ஒன்றியம் -உசன் பாடசாலையின் இன்றைய நிலை குறித்து கலந்துரையாடல்

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம், உசன்  கிராமத்தின் ஒரே பாடசாலையாக விளங்கும் ,இராமநாதன் மகா வித்தியாலயத்தின் இன்றைய நிலை குறித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தது . இதுவரை கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் பாடசாலைக்கு வழங்கிய உதவிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன் , எதிர்கால தேவைகள் , மாணவர்களின் எண்ணிக்கயை அதிகரிக்க கூடிய வாய்ப்புக்கள் குறித்து பாடசாலை அதிபருடன் கலந்துரையாடப்பட்டது , மிகவும் இறுக்கமான நிலையிலும் ஒருசில விடையங்களில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்குள் உசன் இரமாநாதன்  மகா வித்தியாலயம் முன்னிலை வகிப்பது , கவனிக்க கூடியதாக இருந்தது , அவசர தேவையாக பாடசாலையின் நீர்த்தாங்கி திருத்துவதுக்கும் , பாடசாலையின் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதுக்கு ,
ஒலி அமைப்பு சாதனங்களும் தேவைப்படுகிறது .
இதனை அன்பளிப்பு செய்ய உலகில் வாழும் உசன் பாடசாலை பழைய  மாணவர்களை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வேண்டி நிக்கிறது.
அன்பளிப்பு செய்ய விரும்பும் உள்ளங்கள் பாடசாலை அதிபரையோ அல்லது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தியோ தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறோம் .


பாடசாலையின் சில காட்சிகள்













பழுதடைந்த நிலையில் உள்ள நீர்த்தாங்கி








விளையாட்டு மைதானம்



Wednesday, August 5, 2015

கனடா உசன் ஒன்றிய அனுசரணையில் உசனில் இலவச WiFi -Tablet சேவை ஆரம்பம்


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தால் உசன் கிராமத்தில் நடத்தப்பட்டு வரும் பொது நூலகத்தை நவீன முறையில் தரமுயர்த்தும் நோக்கில் .இன்றைய தினம் உசன் கிராம மக்களுக்கு இலவச Internet WiFi சேவை ஆரம்பித்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .அத்துடன் இலகுவாக பொத்தகங்களை வாசிக்க கூடியதாக "I book" சலுகை வழங்கும் முகமாகவும் சிறுவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்ககூடிய வகையில் .
Ipad /Tablet சேவையும் இன்று தொடங்கியுள்ளது .
இந்த வசதியை பொது நூலக அங்கத்தவர்கள் இலவசமாக பயன்படுத்தமுடியும் ஒரு கிராம மக்களின் முழு ஒத்துழைப்புடன் இவாறான சேவை முதன் முதலில் உசன் மக்களால் தொடங்கப்பட்டுள்ளது .
இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது கிராமத்து சிறுவர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது . முதலில் 5 Tablet உடன் ஆரம்பிக்கப்பட இந்த முயற்சி இன்னும் விரிவாக்கம் அடைய புலம் பெயர் வாழ் உசன் மக்களின் உதவியை வேண்டி நிக்கிறோம் .










Tuesday, August 4, 2015

உசனில் இலவச Internet-Wi Fi சேவையும் நவீன Tablet வசதியும் ஆரம்பம்

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் உசனில் இயங்கிவரும் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்தில் , சிறுவர்களின் ஆங்கில அறிவை பெருக்கவும் நவீன இலத்திரனியல் உலகை அறிமுகப்பட்டுத்தும் நோக்கில் ,நவீன galaxy tab 3 android வசதியை கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் வழங்கியுள்ளது . அத்துடன் நூலக அங்கத்தவர்களுக்கு இலவச  wi-fi இன்டர்நெட் சேவையும் நாளை ஆகஸ்ட் 5 ம் திகதி மாலை 2.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது .
நாளை முதல் உசன் கிராம மக்களும் சிறுவர்களும் சிலவசமாக  galaxy tab 3 android வசதியை பயன்படுத்த முடியும். கடந்த மாதம் கனடா ஒன்றிய நிர்வாக உறுப்பினர்கள் நேரடியாக சென்று உசன் மக்களுடன்  எதிர்கால நடவடிக்கைகள் தேவைகள் குறித்து கலந்துரையாடி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது .

 முதல் கட்டமாக 5 நவீன galaxy tab 3 android உபகரணத்தை சாவகச்சேரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் சகோதரி கனடா வாழ் சட்டத்தரணி வாசுகி தேவதாஸ் அவர்கள் வழங்கியிருந்தார் .
தேவையான உப கணனிகள் வழங்க உசனை சேர்ந்த லண்டன் வாழ் வைத்திய கலாநிதி திரு .பரமநாதன் அவர்கள் உதவி புரிந்தார் .
தொடர்ந்து பொது நூலக அங்கத்தவர்களுக்கு மேலும் சில முக்கிய சேவைகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நவீன தொடர்பாடல் வசதியை ஏற்படுத்தி உசன் சிறுவர்களை ஆங்கில மற்று உலக அறிவியலை அதிகரிக்கும் நோக்கமாக இந்த முயற்சி ஆரம்பிக்கப்படுகிறது .






நாளை மாலை 2.30 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வில் உசன் வாழ் மக்கள் அனைவரையும் கலந்து இந்த நவீன சேவையை இலவசமாக அனுபவிக்குமாறு வேண்டுகிறோம் .
இந்த முயற்சிக்கு அனுசரணை வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
இந்த சேவை முயற்சிக்கு அனுசரணை வழங்கியோர் ..

1.Vasuki Devadas Law Office -Canada
2.Dr. பரமநாதன் - UK
3.அஜந்தன்  வெற்றிவேலு -Canada