அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, January 29, 2017

உசன் பாடசாலை விளையாட்டு போட்டியை சிறப்பாக நடாத்தி வீர /வீராங்கனைகளை ஊக்குவிக்க .......

உசன் பாடசாலை விளையாட்டு போட்டியை சிறப்பாக நடாத்தி வீர /வீராங்கனைகளை ஊக்குவிக்க
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ,உசன் பழைய மாணவர் சங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது
உங்கள் குடும்ப அங்கத்தகவர்கள் நினைவாக  கேடயங்கள் மற்றும் பரிசு அன்பளிப்புகள் வழங்க விரும்பின்
தயவு செய்து உங்கள் விபரங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .
தொடர்புகளுக்கு
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -பாஸ்கரன் -0016474487434
உசன் பாடசாலை பழையமாணவர்  சங்கம் -கஜீவன் -0094773090783
                                                                                          சீலன் -0094779396044


திரு.தில்லை .சரவணமுத்து அவர்களின் மரண அறிவித்தல்


உசனைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு தில்லையம்பலம் சரவணமுத்து (தில்லை சரவணமுத்து ) அவர்கள் உசனில் காலமானார்.

அன்னார் திரு திருமதி. தில்லையம்பலம் அவர்களின் மகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்பு கணவனும்,

யோகராசா (முரசுமோட்டை ), சிவசாரசா, சிவநிதி முருகேசு (உசன்), செல்வராசா (றட்ணா அண்ணா -லண்டன் ), ஜெயராசா (ரஞ்சன் மாவீரர் ), காலம் சென்ற கருணாநிதி (இலங்கை இராணுவ தாக்குதலில் உசனில் காலமானவர்), காலம்சென்ற ஜெயராசா, சிறிஸ்கந்தராஜா (மாவீரர், 2ம் லெப், ஜெரால்ட் ), சுவேந்திரராஜா (சுரேன்) ஆகியோரின் அன்பு தந்தையுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரிககைகள் 31.01.2017 திங்கள்கிழமை உசனில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, உசன் ஈச்சங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

தொடர்புகளுக்கு:
செல்வராசா - றட்ணா(மகன், London ): +442083089670
நிதி (மகள், இலங்கை): +94774535346
தகவல்: மாலினி (மருமகள், லண்டன்) : +447938189117
மேலதிக தகவல்: அஜந் - கனடா: +14164276000

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்திக்கிறது.



Friday, January 27, 2017

உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் உருவாகியது புதிய தலைமுறை பழைய மாணவர் சங்கம்
அனைத்துலக பழைய மாணவர்களின் உதவி நாடப்படுகிறது.


நீண்ட வருடங்களின் பின்னர்  உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்துக்கு பழைய மாணவர் சங்கம் 18.12.2016 அன்று மீண்டும் உருவாக்கப்பட்டது. ஒரு பாடசாலையின் முன்னேற்றத்துக்கு பழையமாணவர் சங்கம் மிகவும் முக்கியமானது.  இலங்கை கல்வி சட்டவரைவுக்கு அமைவாக சில முக்கிய விடயங்களை அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கமே முக்கியமாகக் கவனிக்க வேண்டியுள்ளது.  துர்ப்பாக்கிய நிலைமை காரணமாக 1996 ம் ஆண்டுக்குப் பிறகு உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் செயலற்றுப் போனது.  தொடர்ந்து பலரது முயற்சியின் விளைவாக  உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் அனுசரணையுடன் ஆரோக்கியம் மிக்க இளைய தலைமுறையைக் கொண்ட பழைய மாணவர் சங்க அமைப்பொன்று கடந்த 18.12.2016 அன்று  உருவாக்கப்பட்டுள்ளது.  உலகெங்கும் பரந்துபட்டு வாழும் பழைய மாணவர்கள் இந்தச் சங்கத்துக்கும், பாடசாலை அபிவிருத்திக்கும் உதவுவதன் மூலம் உங்கள் பாடசாலைக்கு நன்றிக் கடனைச் செலுத்த முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புதிய இளம் தலைமுறை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் விபரம் வருமாறு:
தலைவர் - அதிபர் திரு த. சோதிலிங்கம்
செயலாளர் - திரு க. திவ்வியசீலன்
உப செயலாளர் - திருமதி ந. சோபனா
பொருளாளர் - செல்வன் அ. கஜீவன்

நிர்வாகசபை உறுப்பினர்கள் -
திரு ஐ. முருகதாஸ்
திரு கு. மதிவதனன்
திரு செ. செந்தூரன்
செல்வன் த. சத்தியன்
செல்வி ப. தண்மதி
செல்வி யோ. துஷானி
செல்வி த. பவப்பிரியா

புலம் பெயர் உசன் உறவுகள் கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியத்திடம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள  முடியும்.

பழைய மாணவர் சங்கம் உருவாக்கம் செய்யப்பட்ட அன்று எடுக்கப்படட பதிவுகள்.













Thursday, January 26, 2017

உசனில் இருந்து உருவாகினார் இளம் சட்ட வழக்கறிஞர் -பாராட்டுங்கள்

உசனில் வந்து குடியேறி, உசன் மக்களோடு ஒன்றாய் கலந்து வாழ்ந்த திரு திருமதி சிவராசா செல்வராணி தம்பதிகளின் புதல்வி செல்வி ரம்யா தனது கனவுக் கல்வியான சட்டத் துறைக் கல்வியை  பல்கலைக்கழகதில்
வெற்றிகரமாக நிறைவு செய்து சட்ட வழக்கறிஞர் (Attorney At Law) ஆக வெளியேறியுள்ளார்.
உசனில் இருந்து அடுத்த சட்டதரணி  உருவானதால் அனைத்துலக உசன் மக்கள் சார்பில்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பெருமகிழ்வு கொள்கிறது.  வாழ்க்கையை வெற்றிகொள்ள குடும்பநிலை முக்கியமில்லை, முயற்சி தான் வெற்றி என நிரூபித்துக் காட்டிய எமது பாடசாலை மாணவியை பெருமிதமாக வாழ்த்துவோம்.  செல்வி ரம்யாவுக்கும் அவர் பெற்றோர்க்கும் எமது வாழ்த்துக்கள் ....





உசன் இராமநாதன் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு


உசன் இராமநாதன் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 31/01/2017 செவாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளதாக பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.  பிற்பகல் 1:30 மணிக்கு பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இந்த நிகழ்வு இடம்பெறும்.

இம்முறை இந்த இந்த நிகழ்வு பழைய மாணவர் சங்கத்தினூடாக ஒழுங்கமைக்கப்பட்டு வருவதாக அச் சங்கம் தெரிவித்துள்ளது.

வித்தியாலய முதல்வர் த. சோதிலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு தென்மராட்சிக் கல்வி வலைய திட்டமிடல் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிவஞானம் மகேஸ்வரன் அவர்கள் முதன்மை விருந்தினாராகக் கலந்து சிறப்பிக்க உள்ளார்.   உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு, மக்கள் வங்கி ஓய்வுநிலை முகாமையாளர் கந்தையா பாலச்சந்திரன் சிறப்பு விருந்தினராகவும், முன்னைநாள் ஆசிரியர் திருமதி புஸ்பராணி நவரத்தினம் அவர்கள் கெளரவ விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அனைவரையம் அன்புடன் அழைக்கிறது.

இந்த மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு சிறப்பாக அமைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை,  இந்த நிகழ்வை முன்னின்று நடாத்தும் பழைய மாணவர் சங்கத்துக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.