அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, December 30, 2017

உசனை சேர்ந்த மாணவர்கள் சிறந்த பெறுபேறு

அண்மையில் வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளில் உசனைச் சேர்ந்த மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உசன் மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

1. திரு. திருமதி மிகுந்தன் துஷி தம்பதிகளின் புதல்வன் செல்வன் வக்சலன் விஞ்ஞான பிரிவில் யாழ் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 9 ம் இடத்தையும்,

2. திரு. திருமதி நவகுமார் தம்பதிகளின் புதல்வி செல்வி தாரங்கி விஞ்ஞான பிரிவில் 3 A சித்தி பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 8 ம் இடத்தையும்,

3. திரு. திருமதி.இரவீந்திரன் தம்பதிகளின் புதல்வி செல்வி ஜோகினி விஞ்ஞான பிரிவில் 2 A, B சித்தி பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 13 ம் இடத்தையும்,

4. திரு. திருமதி உருத்திரமூர்த்தி நங்கை தம்பதிகளின் புதல்வன் செல்வன் வினுஜன் கணித பிரிவில்  3 A சித்தி பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 37 ம் இடத்தையும்,

5. திரு. திருமதி மனோகரன்  தாரணி தம்பதிகளின் புதல்வி செல்வி லக்சி வர்த்தக பிரிவில் 2 A, C சித்தியையும்,

6. திரு. திருமதி சிவப்பிரகாசம் தம்பதிகளின் புதல்வி செல்வி கார்த்திகா விஞ்ஞான பிரிவில் 2 A, B  சித்தி பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 63 ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை வாழ்த்துவதோடு தொடர்ந்து அவர்கள் கல்விப்பயணத்தில் பிரகாசிக்க வாழ்த்துகிறோம்.

உசனைப் பூர்விகமாகக் கொண்ட மாணவர்கள் நல்ல பெறுபேற்றைப் பெற்றிருந்தாலோ அல்லது வேறு துறையில் திறமை பெற்றிருந்தாலோ www.usan.ca இணையத் தளத்தோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர முடியும்.

தொடர்புகளுக்கு: உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
https://www.facebook.com/usanpeople
president@usan.ca
aju@usan.ca



Wednesday, December 13, 2017

திரு.இளையதம்பி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்

உசனை சேர்ந்தவரும் உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் ஆசிரியருமான திருமதி விஜயராணி அவர்களின் அன்பு கணவர்
திரு.இளையதம்பி அவர்கள் , கொழும்பில் காலமானார் ,
அன்னார் திரு.திருமதி ஒப்பிலாமணி அவர்களின் மருமகனாவார் .
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் .
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும் .

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அன்னாரின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தினருக்கு கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது .

தகவல்
விஜயலட்சுமி கனடா      -905-303-4866
விஜயகுமாரி கனடா -416-845-8795
விஜயகுலன் கனடா - 416-720-5215
விஜய ரூபன் கனடா -416-271-1763




Sunday, December 3, 2017

"உசன் உறவுகள்"


அன்பார்ந்த உசன் மக்களே!

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடாந்தம் வழங்கும் உள்ளரங்க நிகழ்வான  "உசன் உறவுகள்" நிகழ்வு கடந்த காலங்களை விட மேலும் சிறப்பாக இந்தமுறை நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.  கனடா வாழ் உசன் மக்களின் தரமான நிகழ்வுகள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த உள்ளன. 

கடந்த வருடம் RA Rhythm இன் "இன்னிசை மழை" மிகவும் வரவேற்பைப் பெற்றிருந்தது.  எனவே இந்த முறையும் அந்த நிகழ்வு மீண்டும் ஒழுங்கு செய்யப்பட்டுள்து என்ற மகிழ்ச்சியான தகவலைப் பரிமாறிக்கொள்ள விரும்புகிறோம்.  நேரடி இசையோடு பாடி அசத்த விரும்புவோர் December 10, 2017 ஆம் திகதிக்கு முன்பாக செயலாளர் விஜயகுமாரிரோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.  பயிற்சிகளை விரைவாக ஆரம்பிக்கவேண்டியுள்ளதால் காலதாமதம் செய்ய வேண்டாம்.

தவிர, "உசன் உறவுகள்" நிகழ்வில் பலவிதமான நிகழ்ச்சிகள் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்த விரும்புவோரும் செயலாளரோடு விரைவில் தொடர்புகொண்டு விபரங்களை வழங்கவும்.

இந்த நிகழ்வை மேலும் சிறபாக்க உங்கள் ஆலோசனைகளைத் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்க விரும்பும் தொழில் அதிபர்கள் மற்றும் தனிப்பட்டோர் செயலாளர் விஜயகுமாரியோடு தொடர்பு கொள்ளவும்.

வெளிநாடு வாழ் உசன் மக்களே கனடாவின் குளிரை அனுபவிப்பதோடு, உங்கள் உறவுகள் அனைவரையும் ஒன்றுசேரச் சந்திப்பதற்கு இந்த நிகழ்வைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு January மாதம்  20 ஆம் திகதி, சனிக்கிழமை Baba Banquet Hall இல் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.  இந்தத் திகதியை குறித்து வைத்து நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அனைவரையும் அன்போடு அழைக்கிறது.


Monday, November 20, 2017

உசன் அபிவிருத்தி நிதி சேகரிப்பு - இன்றைய நிலைமை

பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம் உட்பட உசன் அபிவிருத்திக்காக உசன் சனசமூக நிலையமும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும் நிதி சேகரித்து வருவது குறித்து அறிவித்து உசன் மக்களின் பங்களிப்பைக் கேட்டிருந்தோம்.  Rs.50,00,000.00 ஐ இலக்காகக் கொண்டு இந்த நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  உங்கள் பலரின் பங்களிப்புடன் இந்த நிதி சேகரிப்பு அண்ணளவாக அரைவாசி இலக்கை அண்மித்துக்கொண்டிருக்கிறது என்ற தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.  குறித்த இலக்கை அடைய இன்னும் பங்களிப்புத் தேவைப்படுகிறது.  இந்த நேரத்திலே உசன் சனசமூக நிலையம் உங்களின் உதவியை நாடி எழுதிய கடிதத்தை இங்கே பிரசுரிக்கிறோம்.  உசன் சனசமூக நிலையத்தோடு தொடர்பு கொண்டு உங்கள் நிதி உதவியை வழங்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.

நன்றி.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Please click on the image to enlarge it.


Sunday, November 19, 2017

திருமதி:தவமணி சிதம்பரப்பிள்ளை அவர்கள் இறைபதம் அடைந்தார்

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 18-11-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பண்டாரி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிதம்பரப்பிள்ளை(இளைப்பாறிய பணியாளர் - Royal Razat Farm, ஓமான்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
அன்புக்கரசி, அஜந்தா, அஜந்தன், விஜயகாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கந்தையா, பொன்னுத்துரை(ஓய்வுபெற்ற கணக்காளர்), பரமேஸ்வரி(பிரான்ஸ்), திருஞானமூர்த்தி(பிரான்ஸ்), சிவசுப்பிரமணியம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபுஸ்பராசா, இளங்கோவன், சுசித்வினி, ஜெனிக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வினோஜ், ஆதித், அனுசன், யனுசன், அமிர்தன், அகரவன், ஆர்த்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசன் ஈச்சங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு  கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .

தகவல்
குடும்பத்தினர்
சிதம்பரப்பிள்ளை — இலங்கை
செல்லிடப்பேசி: +94779688080
விஜயகாந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447792732460
அன்புக்கரசி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33148477014
அஜந்தா — கனடா
செல்லிடப்பேசி: +1647765 0760
அஜந்தன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +6143436189