அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, May 23, 2018

கார்த்திகேசு முருகேசு

 
உசனைச் சேர்ந்த கார்த்திகேசு முருகேசு அவர்கள் May 20, 2018 அன்று உசனில் இறைவனடி எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு - நாகமுத்து தம்பதிகளின் மூத்த மகனும்,

May 16, 2018 அன்று இறையடி சேர்ந்த அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

ரகுநாதன் (கனடா), வதனா (உசன்), கமலநாதன் (வட்டுக்கோட்டை) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

காலஞ்சென்ற விநாசித்தம்பி, காலஞ்சென்ற திருமதி முத்துப்பிள்ளை மார்க்கண்டு, மற்றும் சிவயோகநாதன் (நீர்வேலி), ராமநாதன் (கனடா) ஆகியோரின் மூத்த சகோதரனும்,

பரமநாதன் (ஆழ்கடலான்) அவர்களின் மைத்துனரும் ஆவார்.

இறுதிக் கிரியைகள் May 25, 2018, வெள்ளிக்கிழமை அன்று பகல் 12 மணி அளவில் உசனில் இடம்பெறும்.

தொடர்புகளுக்கு:
ரகுநாதன் - +1-416-786-1843
ராமநாதன் - +1-416-299-6763

கார்த்திகேசு முருகேசு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது.


Wednesday, May 16, 2018

திருமதி அன்னபூரணம் முருகேசு


அன்னபூரணம் முருகேசு அவர்கள் 16-05-2018 அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் கார்த்திகேசு முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,

ரகுநாதன் (கனடா), வதனா (உசன்), கமலநாதன் (வட்டுக்கோட்டை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 17-05-2018, வியாழக்கிழமை அன்று உசனில் நடைபெறும்.

அன்னபூரணம் முருகேசு அவர்களின் ஆத்ம சாந்திக்காக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் பிரார்த்திக்கிறது.



Tuesday, May 15, 2018

உசன் கந்தசாமி கோவில்
வருடாந்த திருவிழா


உசன் கந்தசாமி கோவிலின் வருடாந்த திருவிழா நடைபெறும் விளம்பி வருடம், வைகாசி மாதம் 6ஆம் நாள், ஞாயிறுக்கிழமை (20-05-2018) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கவுள்ளது.  தேர்த்திருவிழா 28-05-2018 அன்றும், தீர்த்தத் திருவிழா 29-05-2018 அன்றும் சிறப்பாக நடைபெற உள்ளது.

மேலதிக தகவல்கள் திருவிழா குறித்த பிரசுரத்தில் உள்ளது.




Tuesday, April 10, 2018

"தென்மராட்சி விழா"


இலங்கை, தென்மராட்சிப் பிரதேசத்தில் பின் தங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்கான கல்வி முன்னேற்றத்திற்கு ஆதரவு கொடுப்பதை முக்கியமான நோக்கமாகக் கொண்டு கனடாவில் தென்மராட்சி அபிவிருத்தி சங்கம் புதிய நிர்வாக அங்கத்தவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.

தென்மராட்சி அபிவிருத்தி சங்கத்தைப் பற்றி அறியவும், உங்கள் மகத்தான பங்களிப்புகளைக் கொடுத்து ஆதரவு அளிக்கவும் உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. தென்மராட்சி அபிவிருத்தி சங்கம் வழங்கும் "தென்மராட்சி விழா" வில் கலந்து சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும்  அன்புடன் வேண்டுகின்றனர் சங்கத்தின் நிர்வாகசபையினர்.

2030 Midland Avenue, Toronto, M1S 5G5, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் CICS Community Centerல், சனிக்கிழமை, April 21, 2018 அன்று இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நுழைவுச் சீட்டுகளுக்கும், மேலதிக விபரங்களுக்கும் கீழ்வரும் சங்க நிர்வாக அங்கத்தினர்களை அணுகுங்கள்:

நெல் கேதார நாதன் 416-677-4707
ரமணன் ராமச்சந்திரன் 416-670-6467

"தென்மராட்சி விழா" பெருவெற்றிபெற உசன் மக்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்க வேண்டுமென்று உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு வேண்டி நிற்கிறது.  சிவகுமார் நவரத்தினம், உமாபதி இராசரத்தினம் மற்றும் பாஸ்கரன் சுப்பிரமணியம் ஆகியோரோடு தொடர்பு கொண்டு நுழைவுச் சீட்டுகளை வாங்கிக்கொள்ளவும்.


Saturday, April 7, 2018

வாழ்த்துக்கள் வக்சலன்


உசன் துஷ்யந்தி - மிகுந்தனின் மகனும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவனுமான மிகுந்தன் வக்சலன் ஜப்பான் பயணமாகிறார். கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த (உ.த.) உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களிலும் திறமைச்சித்தி பெற்று மாவட்ட, மாகாண நிலையில் முதலாம் இடத்தினையும், தேசிய ரீதியில் 9ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டவர் வக்சலன் இவர் சதுரங்கம், பூப்பந்து, கர்நாடக சங்கீதம், கணித ஒலிம்பியாட் போன்றவற்றில் திறமை காட்டிய மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கல்வி அமைச்சு தெரிவு செய்து இளையோர் விஞ்ஞான நிகழ்ச்சித் திட்ட “சக்குறா விஞ்ஞானம்” என்னும் திட்டத்தினூடாக யப்பான் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனத்தின் அனுசரணையுடன் யப்பான் சென்று அங்குள்ள விஞ்ஞான தொழில்நுட்பவியல் விடயங்கள் பற்றியும் அறிவியல் விடயங்கள் பற்றியும் அவர்களது வாழ்க்கை முறை, கலை,கலாச்சார விடயங்கள் பற்றியும் அறிந்து கொள்ள செல்லவுள்ளார். இம்முறை இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், கஜகஸ்தான், மாலைதீவு, இந்தோனேசியா, ஆகிய நாடுகள் பங்குபற்றுவது சிறப்பான விடயமாகும். வடமாகாணத்தில் இருந்து செல்லும் ஒரே ஒரு மாணவன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வக்சலனை உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கமும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும் வாழ்த்துகின்றன.