அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, December 16, 2018

உசன் உறவுகள்

Image result for get together


கனடா வாழ் உசன் மக்களின் குளிர்கால ஒன்றுகூடலான "உசன் உறவுகள்" எதிர்வரும் January மாதம், 26 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டு சனிக்கிழமை இடம்பெற்ற உள்ளது. 3300 McNicoll Ave, Scarborough, ON M1V 5J6, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Baba Banquet Halls & Catering இல் இந்த நிகழ்வு இடம்பெறும்.

இந்த நிகழ்வில் உறவுகளை மகிழ வைக்கும் நிகழ்வுகளை வழங்க விரும்புவோர் செயலாளர் விஜயகுமாரி புஷ்பராஜா அவர்களுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறோம்.  416-845-8795 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது secretary@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியிலோ January 10, 2019 இற்கு முன்பாக உங்கள் பங்களிப்பை உறுதிசெய்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நிகழ்வுக்கு அனுசரணை செய்ய விரும்புவோரும் செயலாளருக்கு அறியத் தரலாம்.  தொழில் அதிபர்களோடு தனி நபர்களையும் நிழச்சிக்கு அனுசரணை செய்ய முன்வருமாறு தயவாய் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நிகழ்விலே 2015 - 2018 இடைப்பட்ட ஆண்டுகளில் தங்கள் பட்டப் படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு மதிப்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  எனவே உங்கள் தகவல்களை செயலாளருக்கோ அல்லது திருமதி சாந்தி சிவானந்தனுக்கோ  உடனே தெரியப்படுத்துமாறு பட்டதாரிகளை அன்போடு வேண்டுகிறோம்.  சாந்தி சிவானந்தனுடன் 905-554-2014 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.

இன்னுமொரு சிறப்பு நிகழ்வாக ஓய்வு பெற்ற வயதுவந்தவர்களுக்கு மதிப்பளிக்கப்பட உள்ளது.  இவர்கள் குறித்த தகவல்களையும் செயலாளரோடு அல்லது சாந்தி சிவானந்தனோடு பகிர்ந்து கொள்ளவும்.

"உசன் உறவுகள்" நிகழ்வை மேலும் சிறப்பாக்க உங்களின் ஆலோசனைகளை வேண்டி நிற்கிறோம்.  நிர்வாக சபை உறுப்பினர் ஒருவரோடு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஒன்றிய அங்கத்தவர்களுக்கு மேலதிக கட்டணம் எதுவுமில்லை.  அங்கத்தவர்கள் அல்லாதோரிடமிருந்து 4 பேர் கொண்ட குடும்பமொன்றுக்கு $100.00 உம் தனி ஒருவருக்கு $30.00 உம் கட்டணமாக வாங்கப்படும்.

"உசன் உறவுகள்" நிகழ்வில் கலந்துகொண்டு மகிழுமாறு உசன் மக்களையும், அயற்கிராம மக்களையும், உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தோடு தொடர்புள்ளவர்களையும் அன்போடு அழைக்கிறது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா.

Image result for get together

"USAN URAVUKAL"

The annual Winter get together of Usan people in Canada, "USAN URAVUKAL" will be held on Saturday, January 26, 2019 at Baba Banquet Halls & Catering located at 3300 McNicoll Ave, Scarborough, ON M1V 5J6, Canada.

Anyone wishes to perform at this event, please contact secretary Vijayakumary Pushparajah at 416-845-8795 or email secretary@usan.ca.  Please do so before January 10, 2019.

We are looking for Sponsors.  Anyone interested please inform Secretary.  Sponsors can be Business owners or individuals.

The Executive committee has decided to honour the University graduates in this event who graduated between 2015 and 2018.  Another special item in this event is honouring the retirees.  We kindly request the graduates to contact the Secretary or Mrs. Shanthi Sivananthan with their details.  Also give the information about anyone who you know as the retiree.

We are looking for inputs on how to make "USAN URAVUKAL" a better event.  Please share your suggestions with any member of the Executive committee.

As far as the entrance fee goes there is no additional fee for the members.  A fee of $100.00 per maximum of 4 member family or $30.00 per individuals from non members will be collected at the entrance.  Please oblige to this request.

United People Association of Usan in Canada cordially invites all Usan people, guests from neighboring villages and who are connected to Usan Ramanathan Makaa Viththiyaalayam to this event.

Image result for get together


Tuesday, November 13, 2018

"நாட்டிய தீக்க்ஷ"


பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி பெருமையுடன் வழங்கும் "நாட்டிய தீக்க்ஷ" நிகழ்வு November மாதம் 17 ஆம் திகதி சனிக்கிழமை அன்று இடம்பெறவுள்ளது.  1785 Finch Avenue West, North York, ON, M3N 1M6, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Your Woods Library Theatre இல் சரியாக மாலை 6 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும்.  "சிஷ்யனுக்கு குருவினால் வழங்கப்பட்ட ஆற்றல்" என்ற பொருளில் நடத்தப்படும் இந்த நிகழ்வு பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரத கலா வித்தகர், நாட்டிய பூரணா, திருமதி சியாமா தயாளன் அவர்களின் தயாரிப்பு, நெறியாள்கையில் இடம்பெற உள்ளது.  இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு  சியாமா அவர்கள் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்.

இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகின்றது.

Bhaarati School of Indian Classical Dance proudly presents "NAATYA DEEKSHA", an evening filled with Bharathanatyam accompanied by live music.  Please take this as a personal invitation to the blissful event and bless with your presence.


Sunday, September 23, 2018

உசன் கிராமத்துக்கு ஒளியேற்றிய கனடா வாழ் .....திரு. வசந்தன்

தாயக பூமியில் தற்போதைய பாதுகாப்பற்ற சூழல் காரணமாக மக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடனே காலத்தைக் கழிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த விடையத்தை ஊர் மக்கள் உணர்ந்து உசன் கிராமத்தைப் பாதுகாக்க உதவி  கோரினர். இந்த நிலைமையை நன்கு உணர்ந்த ஊர் பற்றாளன் கனடா "New Market Taxi & Limo " நிறுனவனத்தின் அதிபர் திரு. நடராஜா வசந்தன் அவர்கள் உசன் கிராமத்துக்கு ஒளியேற்றியுள்ளார்.
நீண்டகால கடின உழைப்பின் மத்தியில்  அதிகாரிகளின் மற்றும் உரிய திணைக்களங்களின் அனுமதியுடனும்,
எமது பிரதேசசபை உறுப்பினர் திரு. ரூபன் அவர்களின் அதீத முயற்சியிலும், உசன் இளைஞர்களின் ஒத்துழைப்புடனும் உசன் கிராமம் எங்கும் மின்விளக்கு பொருத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
பெருமளவு பணச்செலவை தனித்து ஏற்று இந்த சிறந்த சேவையை மக்களுக்கு வழங்கி இரவு நேரத்தில் நிம்மதி  கொள்ளவைத்த தொழில் அதிபர் திரு. நடராஜா வசந்தன் அவர்களுக்கு. அனைத்து உசன் மக்கள் சார்பிலும் நன்றி.
உசன் மக்களின் ஒற்றுமையுடன் கூடிய இந்த செயல் திட்டம் உயர் அரச அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உசன் கிராமம் இரவு நேரத்தில் மின்னொளியில் இருப்பதால் அயல் கிராம மக்கள் கூட இரவு நேரங்களில் பயமின்றி உசன் ஊரின் ஊடக பயணம் செய்வதாக மக்கள் பெருமை கொள்கின்றனர். இந்த சிறப்பான திட்டத்துக்கு மின்சாரசபையும் தமது பங்களிப்பை தந்துள்ளது.

இந்த வீதிக்கு மின்விளக்கேற்றும் திட்டம் சிறப்பாக நிறைவேற திரு,வசந்தன் அவர்களின் தோளோடு நின்று பின்வாங்காமல் உதவிய அனைத்து ஊர் மக்களுக்கும், அமைப்புகளுக்கும், மத தலைவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தெரிவித்து கொள்கிறது.







Tuesday, September 18, 2018

உசனில் இருந்து உருவாகிய புதிய சமாதான நீதவான் விஜயரத்தினம்....

 உசன் இராமநாதன் மகா வித்தியாலாய பழைய மாணவனும் உசனை  சேர்ந்த  திரு  திருமதி  ஒப்பிலாமணி அவர்களின் மகனுமான திரு.ஒ விஜயரத்தினம் (சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்)அவர்கள் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்திய பிரமாணம்  செய்துகொண்டார் .
கடந்த 29/08/2018 அன்று யாழ்மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி அ. பிறேம்சங்கர் முன்னிலையில் தனது பதவியை ஏற்றுக்கொண்டார் . திரு.ஒ. விஜயரத்தினம் அவர்கள் . உசன் இராமாநாதன் மகா வித்தியாலயத்தில் கல்விகற்றதுடன் . உசனில் பல மாணவர்களுக்கு கல்வி  புகட்டியுள்ளார் . தற்போது யா/நெல்லியடி மத்தியகல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி வருகிறார்.
புதிய அகில இலங்கை சமாதான நீதவானாக பதவியேற்ற திரு.விஜயரட்ணம் அவர்களுக்கு உசன் ஐக்கியமக்கள்  ஒன்றியம் சார்பாகவும். அனைத்துலக உசன் மக்கள் சார்பாகவும் எமது பாராட்டுகளும்
வாழ்த்துக்களும்





Friday, September 14, 2018

உசனில் இருந்து உதித்த புதிய பின்னணி பாடகி .. திலக்‌ஷினி

மட்டக்களப்பு பொத்துவில் ஸ்ரீஆலயடிப்பிள்ளையார், பத்திரகாளியம்மன் மீது பாடப்பெற்ற "பக்திப்புகழ் பாமாலை" இறுவட்டின் வெளியீடு நேற்று ஆலயத்தில் நடைபெற்றது .
இந்த இசை பாடல்களின் முக்கிய பின்னணி குரல் பாடகியாக உசனை சேர்ந்த செல்வி. திலக்‌ஷினி விமலதர்சன் அவர்கள் தனது இசை திறமையை வெளிப்படுத்தி அனைவரின் பாராடடையும் பெற்றுள்ளார் .
திரு.அ.செல்வகுமார் அவர்களின் பின்னணி இசையில் உருவான இந்த பாடல்களில்  சிவஸ்ரீ பசுபதி சிவனேசதுரைக்குருக்கள் ,செல்வி. திலக்‌ஷினிவிமலதர்சன் ஆகியோர் குரலிசை வழங்கியுள்ளார்
தனது இனிய குரல் வளத்தினாலும் இசை திறமையாலும் மிக சிறிய வயதில் பாடகியாக தெரிவான
செல்வி. திலக்‌ஷினி உசன் திரு திருமதி .தாமோதம்பிள்ளை ஆசிரியர்  அவர்களின் பேத்தியும் . சங்கீத ஆசிரியை சிவசாந்தினி விமலதர்ஷன்(மட்டகளப்பு மாவட்ட  சங்கீத ஆசிரிய ஆலோசகர்) ஆகியோரின் புதல்வியுமாவார்.
செல்வி. திலக்‌ஷினி இசை துறை மேற்படிப்புக்காக யாழ் இராமாநாதன் கல்லூரிக்கு தெரிவாகியுள்ளார் .
உசனில் உதித்த புதிய பின்னணி பாடகி செல்வி. திலக்‌ஷினிக்கு  பாராட்டுகளை தெரிவிப்பதுடன்  இசை துறையில் இன்னும்  சாதிக்க உசன் மக்கள் சார்பில் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
புலம் பெயர் தேசங்களின் உள்ள உசன் மக்கள் இந்த பாடல்களை கேட்டு திலக்‌ஷினிக்கு இசை ஆதரவு வழங்க வேண்டுகிறோம் .