அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, February 26, 2021

துயர் பகிர்வு - பெரியதம்பி பாலசிங்கம்


உசனைச் சேர்ந்த பெரியதம்பி (பெரியார்) பாலசிங்கம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் லீலாவதி அவர்களின் பாசமிகு கணவனும்,

தர்சினி, குமுதினி, றஞ்சித் ஆகியோரின் அன்புத் தகப்பனும்,

குகதாசன், வரதராசன், காஞ்சி ஆகியோரின் மாமனாருமாவார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வேண்டிக்கொள்ளும் அதேவேளை அன்னாரின் பிரிவால் துவண்டுபோயிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், நண்பர்களுக்கும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


Wednesday, February 24, 2021

துயர் பகிர்வு - ஞானசெல்வம் கிறிஸ்ரி பிறேமகுமார்



உசனைப் பிறப்பிடமாகவும், இல. 78 குருசோ வீதி, யாழப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட ஞானசெல்வம் கிறிஸ்ரி பிறேமகுமார்  (ரிச்சேட்டப்பாவின் பேரன்) அவர்கள் 13.02.2021, சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானசெல்வம், பூமலர் ஆகியோரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம், பத்மராணி ஆகியோரின், அன்பு மருமகனும்,

கிறிஸ்ரினா தர்ஷினியின் (Accountant - St. John's College, Jaffna) அன்புக் கணவரும்,

Noel Rukshan (London), Joel Anukshan (HNB -நெல்லியடி கிளை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டிம்பிள் திசாந்தி Rukshan (London), ஜொஆன் ஷாலினி Anukshan (Interpreter - Danish Consulate) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கெசியா மிஷேல் Rukshan அவர்களின் பாசமிகு பேரனும்,

பிறேமறஞ்சினி சோமநாதர், பிறேமகுமாரி புஷ்பராஜா (Retired Teacher) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஜெயந்தன் பரராஜசிங்கம் (Canada), சுகந்தன் பரராஜசிங்கம் (Canada), துஷ்யந்தன் பரராஜசிங்கம், கிறிஸ்ரி பரராஜசிங்கம் (Proprietor - Para Lights) ஆகியோரின் பாசமிகு மைத்துனருமாவார்,

அன்னாரின் பூதவுடல் White House Parlour, இல. 181 பிராதன வீதி,யாழ்ப்பாணத்தில் 25.02.2021, வியாழக்கிழமை காலை 8 மணி தொடக்கம் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் நல்லடக்க வழிபாட்டின் பின்னர், அராலி அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபையின் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை அருட்பணியாளர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் - குடும்பபத்தினர்.
+94778447849

அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றுக்காக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வேண்டிக்கொள்கிறது.  அன்னாரின் பிரிவால் துவண்டுபோயிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.






Saturday, January 30, 2021

Requesting Donations for Preschool Building


Dear Usan people, friends, and family,


Preschool is a vital part of a child’s education and an important asset to a village. It gives young children the foundation they need to become well prepared for their educational journey, and tremendously increases their opportunities to grow. In order for a child to effectively experience the benefits of preschool, a permanent facility is an utmost need.


Our beloved village is sadly missing a stand-alone preschool building. But thankfully, a great opportunity has been given to Usan to construct a permanent preschool building. Due to the relentless efforts of the Usan Ramanathan Preschool committee, World Vision Lanka has agreed to donate a portion of the funds needed to create the building. The proposal to construct the building requested Rs.37,00,000/=, and World Vision Lanka has agreed to provide Rs.27,00,000/=. This means that the committee has to come up with the remaining Rs.10,00,000/=.


To fulfill this need, the Usan Ramanathan Preschool Development Committee has been formed with Mr. K. Vimalathas as the President, Mrs. Gobika Matheesan as the Secretary, and Mr. K. S. Selvaruban as the Treasurer. This committee is now seeking our help, along with the help of other well wishers, to complete this project.


We, the United People Association of Usan in Canada, are kindly asking for your support, and that you consider donating to help make this dream a reality. On top of the minimum Rs.10,00,000/=, there is always unexpected additional costs for such a big project, and after construction is over, the preschool will need items like furniture, play equipment, etc. to fulfill it’s purpose and goals. Keeping all of this in mind, please donate generously.

For those who wish to donate, you can do so in one of two ways. First, you can do so through the United People Association of Usan in Canada. Please e-transfer your contribution to our Treasurer, Mr. Saravanamuththu Patmakanthan, at pathman.s1@hotmail.com, and then send him a separate email with your full mailing or e-mail address for a receipt. The second way to donate is by directly sending your contribution to the Usan Ramanathan Preschool Development Committee through the Kodikamam branch of the Bank of Ceylon. Please send your donation to the account number 87030672.


For those of you who are able to donate, please do so by February 10, 2021. Any amount can help make a huge difference. However, we do understand that in these unprecedented times, you may not be able to donate, in which case we kindly ask you to support this cause by sharing this post.


The United People Association of Usan in Canada thanks you in advance from the bottom of our hearts for helping create a better life for many children in our home village.


Executive Committee

United People Association of Usan in Canada



Friday, January 29, 2021

உசன் இராமநாதன் முன்பள்ளி - கட்டிட நிதி உதவி



ஒரு கிராமத்தின் வளர்ச்சியில் பாடசாலை எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறதோ அதற்கு இணையான பங்கை முன்பள்ளியும் வகிக்கிறது.  ஆரம்பக் கல்வியை செவ்வனே ஊட்டி இளையவர்களைப் பாடசாலைக் கல்விக்குத் தயார் செய்யும் ஒரு பாரிய பொறுப்பை முன்பள்ளி வகிக்கின்றது. இப்படியான ஒரு முன்பள்ளிக்கு எமது தாய்க்கிராமமாம் உசனிலே இதுவரை ஒரு நிரந்தரக் கட்டிடம் இல்லாதிருப்பது பெருங்குறையே.

இந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கான அரிய சந்தர்ப்பமொன்று வந்துள்ளது. உசன் இராமநாதன் முன்பள்ளி நிர்வாகத்தின் அயராத முயற்சியால் World Vision Lakna எனும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் ஒரு நிரந்தரக் கட்டிடத்தைக் கட்டித்தர முன்வந்துள்ளது.  இதற்காக 37 இலட்சம் ரூபாவுக்கு வழங்கப்பட்ட 
மதிப்பீடு நிபந்தனையோடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிரந்தரக் கட்டிடத்தைக் கட்டுவதற்கு World Vision Lakna 27 இலட்சம் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது.  மிகுதி 10 இலட்சம் ரூபாவை உசன் இராமநாதன் முன்பள்ளி வழங்கவேண்டும் என்பதே நிபந்தனை.  இந்த நிலையில் உசன் இராமநாதன் முன்பள்ளி நிர்வாகம் உசன் மக்களிடமும் மற்றும் கொடையாளிகளிடமும் நிதி உதவி கேட்டு விண்ணப்பித்துள்ளது.


இந்த முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக உசன் இராமநாதன் முன்பள்ளி அபிவிருத்திக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக உசன் கந்தசாமி கோவில் தர்மகர்த்தா கு. விமலதாஸ் அவர்களும், செயலாளராக கோபிகா மதீசன் அவர்களும், பொருளாளராக சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கா. சி. செல்வரூபன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கட்டிடத்துக்கான காணியை வழங்குவதற்கு திரு விமலதாஸ் அவர்கள் முன்வந்துள்ளார்.

கட்டிட நிதிக்காக உசன் மக்கள் சார்பில் 10 இலட்சம் ரூபா வைப்பிலிடவேண்டும்.  இதைவிட தளபாடங்கள் உட்பட மேலதிக செலவுகளும் ஏற்படும் என்பதையும் கருத்திற்கொண்டு முடிந்தவரை நிதி உதவியைச் செய்யவேண்டுமென உசன் மக்களை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வேண்டிநிற்கின்றது.

இந்த நிதியை Feb. 15 திகதிக்கு முன்பாக வங்கிக்கணக்கில் வைப்பிலிடவேண்டும்.  ஏற்கனவே பொருளாளர் செல்வரூபன் அவர்களின் வேண்டுகோளையேற்று பலர் நிதிப் பங்களிப்புச் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.  ஏனையோரும் விரைவாக முன்வந்து நிதி உதவி செய்து இந்த நற்காரியம் வெற்றிகரமாக நிறைவேற உதவ வேண்டும்.

கனடாவிலிருந்து நிதி வழங்க விரும்புவோர் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவினூடாக இந்த நிதி வழங்கலைச் செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் பங்களிப்பை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் 
 - கனடாவின் பொருளாளர் சரவணமுத்து பத்மகாந்தன் அவர்களுக்கு pathman.s1@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு e-transfer செய்யுமாறு வேண்டுகிறோம்.  உங்கள் பங்களிப்புக்குப் பற்றுச் சீட்டு வழங்குவதற்காக உங்கள் முழுமையான தபால் முகவரியையோ அல்லது மின்னஞ்சல் முகவரியையோ பத்மகாந்தனுக்கு வழங்குமாறும் வேண்டுகிறோம்.

உங்கள் நிதி உதவியை Feb.10 ஆம் திகதிக்கு முன் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மற்றைய நாடுகளிலிருப்போர் உங்கள் நிதிப் பங்களிப்பை நேரடியாக உசன் இராமநாதன் முன்பள்ளி அபிவிருத்தி குழுவிடம் கையளிக்க முடியும்.  உங்கள் நிதியை இலங்கை வங்கி கொடிகாமம் கிளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கணக்கிலக்கம் 87030672 இல் வைப்புச் செய்யவும். இந்த வாங்கிக் கணக்கு திரு கு. விமலதாஸ், திருமதி ம. கோபிகா மற்றும் திரு கா. சி. செல்வரூபன் ஆகியோரைக்கொண்ட இணைப்புக் கணக்காகும்.

மனம் நிறைந்த உங்கள் பங்களிப்பை விரைந்து வழங்குவீர்.

கொடையாளிகள் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசன் இராமநாதன் முன்பள்ளி நிர்வாகம் சார்பில் முன்கூட்டியே தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.


Sunday, January 17, 2021

நன்றி! நன்றி!! நன்றி!!!


"உசன் உறவுகள் - சர்வதேச இணைய விழா" சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்று முடிந்திருப்பதை உங்களிடமிருந்து வரும் வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றிகளும் பறைசாற்றி நிற்கின்றன. இப்படியான ஒரு நிகழ்வை வழங்க முடிந்ததையிட்டு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பெருமை கொள்கிறது.
Toronto நேரம் காலை 7 மணிக்கு இணைப்பை ஏற்படுத்த முடியும் என்று அறிவித்திருந்தபோதும், காலை 6:30 மணிக்கு இணைப்பை ஆரம்பித்தபோதே மக்கள் காத்திருந்தது நிகழ்வின் வெற்றியைக் கட்டியம் கூறியது. அந்த நேரத்தில் இணைந்தவர்கள் கலை நிகழ்வுகள் முடியும்வரை தொடர்ந்திருந்தது நிகழ்ச்சியின் தரத்தை எடுத்துக்கூறியது.
கிட்டத்தட்ட 158 இணைப்புகள் ஒரே நேரத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஒரு இணைப்பில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் குடும்பமாக நிகழ்ச்சிகளை பார்த்தும், கேட்டும் மகிழ்ந்தனர். New Zealand, Australia, Switzerland, France, Germany, Italy, Sweden, Denmark, Norway, UK, Sri Lanka, USA, Canada என்று 13 இற்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து நேர வித்தியாசத்தையும் கடந்து பார்வையாளர்கள் கலந்துகொண்டது நிகழ்ச்சிக்குச் சிறப்பே.
கலை நிகழ்ச்சிகள் அத்தனையும் மிகவும் சிறப்பாக இருந்தன. கிட்டத்தட்ட மூன்றரை மணித்தியாலங்கள் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து உறவுகளோடு உரையாடல் ஆரம்பித்து மேலும் இரு மணித்தியாலங்கள் நீடித்தது. ஒருவரை ஒருவர் தேடித் தேடிக் கதைத்தார்கள். உள்ளத்தில் உறங்கிக்கொண்டிருந்த உணர்வுகள் அப்போது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தன. பலர் உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டனர். கண்கள் பனிக்க, இதயம் படபடக்க பிரிய மனமின்றிப் பலர் பிரிந்து சென்றனர்.
கலை நிகழ்ச்சிகளை வழங்கிய கலைஞர்களுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தவண்ணமுள்ளனர். உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும் இந்தக் கலைஞர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜோதி ஜெயகுமாருக்குப் பாராட்டுகள் வந்து குவிந்தவண்ணமுள்ளன. நிகழ்ச்சிகளைச் சிறப்பாகவும், சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டும் அவர் தொகுத்தளித்தது நிகழ்ச்சியின் வெற்றிக்கு இன்னுமொரு காரணம்.
"அந்தத் தம்பிக்கும் எங்கள் நன்றியையும், வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துவிடுங்கள்" என்று பலர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். நிகழ்வுகள் தொய்வின்றி தொடர தொழில்நுட்பத்தில் கடுமையாக உழைத்த கீரனையே அவர்கள் "தம்பி" என்று உரிமையோடு அழைத்தனர்.
ஜோதிக்கும், கீரனுக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தலை சாய்த்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
மொத்தத்தில் "உசன் உறவுகள் - சர்வதேச இணைய விழா" வெற்றிகரமாக நடைபெற உதவிய அத்தனைபேருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நன்றியத் தெரிவித்து நிற்கிறது.