அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, October 14, 2023

துயர் பகிர்வு - திருமதி கௌரீஸ்வரி புஷ்பராஜா

உசனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கௌரீஸ்வரி புஷ்பராஜா அவர்கள் வெள்ளிக்கிழமை, October 13, 2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் வீரகட்டிய மாணிக்கம் & Sons முன்னாள் உரிமையாளர் காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் பேர்த்தியும்.

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் - தெய்வானைப்பிள்ளை (வசந்தா) அவர்களின் அன்பு மகளும்,

புஷ்பராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

நிருஷன், மேனன், தனுஷா ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை, October 14, 2023 அன்று Lanka மலர்ச் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பூதவுடல் ஞாயிற்றுக் கிழமை October 15, 2023 அன்று பிற்பகல் 1:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல் - குடுமபத்தினர்

தொடர்புகளுக்கு
மேனன் - +94 76 748 5207
நிருஷன் - +94 77 748 5207

அமரர் கௌரீஸ்வரி அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்னாரின் மறைவால் துயருற்ரிருக்கும் குடும்பத்தினருக்குத் தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.




Sunday, August 6, 2023

வருடாந்தப் பொதுக் கூட்டமும், கோடை கால ஒன்றுகூடலும் - 2023


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்தப் பொதுக் கூட்டமும், கோடை கால ஒன்றுகூடலும் August 26, 2023, சனிக்கிழமையன்று இடம்பெறவுள்ளன. Neilson Road and Finch Avenue சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள Neilson Park இல் இந்நிகழ்வு இடம்பெறும். காலை 10 மணிக்கு காலை உணவுடன் ஆரம்பமாகும் இந்நிகழ்வு மாலை 6 மணி வரை இடம்பெறும்.
பொதுக் கூட்டம் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும். இந்த நேரத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உங்கள் ஆரோக்கியமான கருத்துகளைத் தெரிவித்து ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு உதவுமாறு உசன் மக்கள் அனைவரையும் அன்போடு வேண்டுகிறோம்.
ஒன்றுகூடலில் குழை சாதம், BBQ chicken, burger, hot dog, சுண்டல் முதலியவற்றோடு உங்கள் அனைவரினதும் அபிமானத்தைப் பெற்ற கொத்து ரொட்டியும் பரிமாறப்படும்.


அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. சிறப்பு விளையாட்டாக எமது பாரம்பரிய கயிறிழுத்தல் போட்டியும் இடம்பெறும்.
சிறுவர்களுக்கான சிறப்பம்சமாக வினோத உடைப் போட்டியும் (Fancy Dress competition) இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம். 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ,சிறுமிகள் இதில் பங்குபற்றிப் பரிசுகளைத் தட்டிச் செல்ல முடியும். பெற்றோர்களே இந்தப் போட்டியில் உங்கள் பிள்ளைகளும் கலந்து சிறப்பிக்க இப்போதே ஆயத்தங்களைச் செய்யவும்.


உசன் மக்களின் இந்த ஒன்றுகூடலில் கலந்து சிறப்பிக்குமாறு உசன் மக்களோடு அயற்கிராமத்து மக்களையும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்களையும் அன்போடு அழைக்கிறோம்.
வாருங்கள், வாருங்கள்! வந்து கலந்து மகிழ்ந்திருங்கள்!
நன்றி.
நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


இசை இணைக்கிறது - Music Connects


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் நிகழ்வுகளில் தேனினுமினிய இன்னிசை வழங்கும் அன்புக்குரிய பிரதிஷ்னி மதீஸ்வரன் - மயூரன் தனன்ஜெயன் இணையர் இணைந்து வழங்கும் இன்னுமொரு இசைவிருந்து. TVI இன் Music Connects நிகழ்ச்சியில் நேரடியாகப் பாடல்களைப் பாடி உங்களை மகிழ்ச்சிப்படுத்தவுள்ளார்கள். August 8, 2023, செவ்வாய்க்கிழமை அன்று Toronto நேரம் மாலை 8 மணி முதல் 9:30 மணிவரை இடம்பெறவுள்ள இந்த நிகழ்ச்சியைக் கண்டும், கேட்டும் மகிழ்வதோடு நேரடியாக அவர்களை வாழ்த்தவும் முடியும்.
இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிடாது இசை மலையில் நனைத்து இன்புறுமாறு அனைவரையும் அன்போடு வேண்டுகிறோம்.
இந்த நிகழ்ச்சி இனிதே நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழும் அதேவேளை பிரதிஷ்னிக்கும் மயூரனுக்கும் இசைத்த துறையில் மேலும் பிரகாசிக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.


Thursday, July 6, 2023

துயர் பகிர்வு - கணேசரத்தினம் முத்தையா


உசனைச் சேர்ந்த வெற்றிவேலு அஜந்தன் அவர்களின் மாமனார் கணேசரத்தினம் முத்தையா அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த கவலையோடு பகிர்ந்துகொள்கிறோம்.
யாழ் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தம்புவத்தையை வாழ்விடமாகவும், கனடா Torontoவில் வசித்து வந்தவருமான கணேசரத்தினம் முத்தையா அவர்கள் July 04, 2023 அன்று Torontoவில் இறைவனடி எய்தினார்.
அன்னார் காலம்சென்ற முத்தையா பூமணி தம்பதிகளின் மகனும்,
அரியமலர் (கனடா ) அவர்களின் அன்புக் கணவரும்,
தஜேந்திரன் (கனடா-VIVA -YRT ), கலைமதி (நியூஸிலாந்து), கஜனி (கனடா- அமுதசுரபி உணவகம்), சுரேந்திரன் (கனடா), கௌரிஜி (கனடா-Tamilkadai Online Shopping ) ஆகியோரின் அன்பு தந்தையும்,
லெஜினா (கனடா-VIVA -YRT ), குகனேந்திரன் (நியூசிலாந்து), வாமதேவன் (கனடா- அமுதசுரபி உணவகம்), தமிழினி (கனடா), அஜந்தன் (கனடா -Go Transit-Metrolinx) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜதுர்ஷன், விதுர்ஷன், மலரினி, கலைமகன், புகழினி, றிஷானா, பிரஷானா, கவிஸ், ஜனுஜன்,சாருஜன், விருஜன், சஹானி, அஜீனி, அக்கில், அகீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பத்மநாதன் (ஜெர்மனி), தர்மகுலசிங்கம் (ஜெர்மனி), பவளராணி (கனடா), புஷ்பராணி (கனடா), ராஜன் (கனடா), மோகன் (கனடா-MakTax Service) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் July 8 ம் திகதி, சனிக்கிழமை காலை 10 மணி முதல் Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3 இல் பார்வைக்கு வைக்கப்பட்டு மாலை 2 மணிக்கு ஈமைக்கிரிகைகள் நடைபெற்று அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :
அரியமலர்-மனைவி-கனடா +16475479141
இந்திரன்-மகன்-கனடா -+14168014386
மதி-மகள்-நியூசிலாந்து +64223621569
கஜனி-மகள்-கனடா +16478859237
சுரேன்-மகன்-கனடா
கௌரி-மகள்-கனடா -+16479607404
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா, அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறது.


Wednesday, May 17, 2023

"உசன் வசந்த விழா - 2023"


உசன் உறவுகள் ஒன்றிணையும் ஓர் ஒப்பற்ற நிகழ்வு!

நிலத்திலும், புலத்திலும் வாழும் உசன் மக்களை ஒருங்கிணைத்து Usan Foundation பெருமையுடன் வழங்கும் முதலாவது அரங்க நிகழ்வு!

June மாதம் 10 ஆம் திகதி, சனிக்கிழமை அன்று உசன் இராமநாதன் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் மாபெரும் நிகழ்வாக "உசன் வசந்த விழா - 2023"

தலைமேயேற்று நடத்துகிறார் திருமிகு வைத்திய கலாநிதி ஐயாத்துரை ஜெபநாமகணேசன் (உப தலைவர், Usan Foundation)

பிரதம விருந்தினர் - திருமிகு அம்பலவாணர் சிவபாலசுந்தரன் (அரசாங்க அதிபர், யாழ்ப்பாணம்)

சிறப்பு விருந்தினர்கள் 
திருமிகு குணசிங்கம் மிகுந்தன் (சிரேஷ்ட பேராசிரியர், விவசாய உயிரியல் துறை, விவசாய பீடம், யாழ்ப்பாண பல்கலைக் கழகம்)
திருமிகு வைத்திய கலாநிதி சிவபாதம் சுதோகுமார் (பொறுப்பு வைத்திய அதிகாரி, தென்மராட்சி)
திருமிகு யோண்பிள்ளை சுசீந்திரன் அருள்ராஜ் (மேலதிக அரசாங்க அதிபர், திருகோணமலை)

உசன் மண்ணை வளப்படுத்தும் மற்றும் உசன் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் சேவையார்களை வாழும்பொழுதே வாழ்த்திக் கம் பண்ணுவோம்!

விசேட நிகழ்வாக யாழ்ப்பாணம் சக்சபோன் சகோதரர்கள் R. Y. நவறூபன் மற்றும் R. Y. காண்டீபன் வழங்கும் நாத இசைச் சங்கமம்.

அனைத்து விருந்தினர்களையும் மகிழ்விக்க இராப்போசனம்.

கட்டணம் எதுவுமில்லாத காத்திரமான நிகழ்வு!

வரலாறு படைப்போம் வாரீர், உசன் மக்களே!

Usan Foundation சார்பில்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா