அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, January 14, 2024


உசனைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை வரதகுமார் (வரதன்) அவர்களின் மாமனார் முருகேசு பரமானந்தம் அவர்களின் துயர் பகிர்வு.

யாழ்ப்பாணம், கோண்டாவில் அன்னங்கை வீரபத்திரர் கோவில் கலைவாணி வீதியைப் பிறப்பிடமாகவும், வன்னிச்சி கோவிலடி வல்வெட்டியை நீண்டகால வசிப்பிடமாகக் கொண்டவரும், தற்போது கனடாவில்  வசித்து வந்தவருமாகிய முருகேசு பரமானந்தம் அவர்கள் 13/01/2024 இரவு கனடாவில்  சிவபதமடைந்துவிட்டார் என்பதனை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். 

அன்னார் லட்சுமிதேவி (தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலம் சென்றவர்களான முருகேசு கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலம் சென்ற வேலுப்பிள்ளை மற்றும் பூபதிதேவி ஆகியேரின் அன்பு மருமகனும்,

காலம் சென்றவர்களான அன்னபூரணம், தங்கலட்சுமி, மலர்மணி, தாமோதரம்பிள்ளை (மகேந்திரம்), பாலசிங்கம் (தவராசா), சின்னராசா (சின்னகிளி) மற்றும், நடேசபிள்ளை (நடேஸ்) ஆகியேரின் அன்புச்  சகோதரரும்,

உஷாம்பிகை (உஷா, கனடா), உதயகுமார் (உசன், லண்டன்), பத்மநாபன் (கஜன், கனடா), சர்மினி (சுவிஸ்) ஆகியேரின் அன்புத் தந்தையாரும்,

வரதன் (கனடா), சங்கீதா (லண்டன்), கேபினா (கனடா), லதன் (சுவிஸ்) ஆகியேரின் அன்பு மாமனாரும்,

வர்ஷா, ஆதி, திஷானா, கிசோரி, ஹாசினி, சாருஜயன், சாரிஷா, பிரியங்கா, திவ்யா, லயா, ஜெய் ஆகியேரின் அன்புப் பேரனும்,

பராசக்தி, கமலம், ராசன், ராணி, ரவி, விஜியன், செந்தி, கமலா, தபோ, விஜி, மறும், காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை, இலங்கநாதன், பரமநாதன், புவனேஸ்வரி, சரஸ்வதி, புஸ்பம், தவம் ஆகியேரின் அன்பு மைதுனரும் ஆவார். 

இறுதி கிரிகைகள் 

பார்வைக்கு:
20-01-2024 சனிக்கிழமை பிற்பகல் 5 மணி முதல் 9 மணி வரை
21-01-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரை 

கிரிகை:
21-01-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை 

தகனம்:
21-01-2024 ஞாயிற்றுக்கிழமை 11:30 மணி 

முகவரி:
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave
Ajax, ON L1S 2E3

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

மேலதிக தெடர்புகளுக்கு
உஷா (மகள்) கனடா - +1-416-419 - 0391 
வரதன் (மருமகன்) கனடா +1-647-567 - 7959
கஜன் (மகன்) கனடா - +1-416-723 - 5571
உதயகுமார் (உசன், மகன்) லண்டன் - +44 7948625805
சர்மினி (மகள்) சுவிஸ்
செந்தி (மைத்துனர்) கனடா - +1-647-302 - 5571
ரவி (மைத்துனர்) டென்மார்க் - +45 28349312


Sunday, November 19, 2023

"உசன் உறவுகள்"


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
வழங்கும்
"உசன் உறவுகள்"
(குளிர்கால ஒன்றுகூடல்)

திகதி: நவம்பர் 25, 2023, சனிக்கிழமை 
நேரம்: மாலை 6 மணி
இடம்: Baba Banquet Halls
3300 McNicoll Avenue, Scarborough, ON M1V 5J6

கலை நிகழ்வுகளோடு இரவு விருந்துமுண்டு. மலை 7 மணி முதல் மலை 7:30 மணி வரை மண்டபத்தில் வைத்து அப்பம் சுட்டுப் பரிமாறப்படும் என்ற தகவலையும் மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

புத்தம் புதிய நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் நிகழ்வைக் கலகலப்பாக்கக் காத்திருக்கிறார்கள்!

இந்த நிகழ்வுக்கான செலவைப் பகிர்ந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம்.
பொருட்களின் விலைகள் பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில் உங்கள் அனைவரினதும் தாராளமான நிதிப் பங்களிப்பு அவசியமாகிறது.  நிர்வாகசபைக்குள்ளே இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றத்தின்பின் கீழுள்ளவாறு செலவைப் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.

அங்கத்தவர் அல்லாதோர்
ஒருவர் - $50.00
இருவர் அல்லது மூவர் - $100.00
நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் - $150.00

அங்கத்தவர்கள் மேலதிகமாக குடும்பமொன்றுக்கு $50.00

இந்த வேண்டுகோளை நீங்கள் அனைவரும் மனதார ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

மண்டபம் நிறைந்த மக்கள் வருகை நிகழ்வைச் சிறப்பாக்கும்.

உங்கள் அனைவரையும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்!

நன்றி.

நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா

நிகழ்ச்சிகள்

*
மங்கல விளக்கேற்றல்
திரு. திருமதி நகுலன்
திரு. திருமதி சிவானந்தன்


* தேவாரம்
திருமதி றஜனி மதீஸ்வரன்


* கனடிய தேசிய கீதம்

செல்வி அம்ரிதா நிர்மலன்

செல்வி பிரனிதா நிர்மலன்


* உசன் கீதம்
திருமதி றஞ்சி வெற்றிவேலு


* அமைதி வணக்கம்


* வரவேற்புரை
திரு. சிதம்பரப்பிள்ளை தயாபரன்

(உப தலைவர், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா)

* நடனம்
செல்வி ஓவியா தவக்குமார்
ஸ்ருதி திவபரன்
ஆசிரியை ஶ்ரீமதி சியாமா தயாளன்
(Bhaarati School of Indian Classical Dance)


* பாடல்
செல்வி தியானா இளங்கீரன்


* நடனம்
செல்வி துஷாரா திருகரன்


* பாடல்
செல்வி ஐஸ்னா அரவிந்தன்

* விசேட உரை

திரு. சிவலோகநாதன் ஜெகன்

(London)


* நடனம்
செல்வி திஸ்யா இளங்கீரன்

* மாவீரர் பாடல்
திரு. இளங்கீரன் தங்கவேலாயுதம்


* தலைவர் உரை
திரு. சரவணமுத்து பத்மகாந்தன்
(
தலைவர், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா)


* மூதாளர்களுக்கான போட்டி நிகழ்ச்சி (Parcel Passing)


* சிறியோர் போட்டி நிகழ்ச்சி (Musical Chair)


* பெரியோர் போட்டி நிகழ்ச்சி (Musical Chair)


* நன்றி நவிலல்
திருமதி ஷெமிலா பிரகலாதன்
(
செயலாளர், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா)




Saturday, November 4, 2023

"நாட்டிய தீக்க்ஷ" நடன நிகழ்வு


பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி பெருமையுடன் வழங்கும் "நாட்டிய தீக்க்ஷ" நடன நிகழ்வு November 19, 2023, ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெறவுள்ளது. 1785 Finch Ave W, Toronto, ON M3N 1M6, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் York Woods Library Theater இல் சரியாக மாலை 5:30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும். சிற்றுண்டிகள் மாலை 5 மணியிலிருந்து 5:30 மணி வரை வழங்கப்படும்.

இந்த நிகழ்வு பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரத கலா வித்தகர், நாட்டிய பூரணா, திருமதி சியாமா தயாளன் அவர்களின் தயாரிப்பு, நெறியாள்கையில் இடம்பெற உள்ளது.

இளம் நாட்டியக்கலைஞர்களின் அதீத முயற்சியால் ஒரு பிரமாண்டமான நிகழ்வாக இது அமைகின்றது.

பிரபலமான பக்கவாத்தியக் கலைஞர்களின் பங்களிப்பு நிகழ்வை மேலும் சிறப்பிக்கும்.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு திருமதி சியாமா தயாளன் அவர்களும் நாட்டிய தீக்க்ஷ குழுவும் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறது.

இந்த நடன விருந்தில் கலந்து மகிழுமாறு உசன் மக்களை வேண்டிநிற்கும் அதே வேளை
"நாட்டிய தீக்க்ஷ" சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகின்றது.

Vanakkam 🙏
Bhaarati School of Indian Classical Dance proudly presents,
NATYA DEEKSHA, on November 19th. 2023. The Natya Deeksha team humbly invites you to enjoy this showcase of dance.
Our dancers have put in a tremendous amount of effort to present this event. Your esteemed presence is greatly appreciated and valued.
Date and Venue:
Sunday, November 19th. 2023 at 5.30pm
(Refreshments are served from 5:00 pm to 5:30)
York Woods Library Theater
1785 Finch Ave W, Toronto, ON M3N 1M6
Photo credit: Sirosh Antony

United People Association of Usan in Canada extends it's wishes to the young, talented artists and their guru Srimathi Shiyama Thayaalan and invites all Usan people to enjoy this showcase of dance.


Saturday, October 14, 2023

துயர் பகிர்வு - திருமதி கௌரீஸ்வரி புஷ்பராஜா

உசனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கௌரீஸ்வரி புஷ்பராஜா அவர்கள் வெள்ளிக்கிழமை, October 13, 2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் வீரகட்டிய மாணிக்கம் & Sons முன்னாள் உரிமையாளர் காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் பேர்த்தியும்.

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் - தெய்வானைப்பிள்ளை (வசந்தா) அவர்களின் அன்பு மகளும்,

புஷ்பராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

நிருஷன், மேனன், தனுஷா ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை, October 14, 2023 அன்று Lanka மலர்ச் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பூதவுடல் ஞாயிற்றுக் கிழமை October 15, 2023 அன்று பிற்பகல் 1:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல் - குடுமபத்தினர்

தொடர்புகளுக்கு
மேனன் - +94 76 748 5207
நிருஷன் - +94 77 748 5207

அமரர் கௌரீஸ்வரி அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்னாரின் மறைவால் துயருற்ரிருக்கும் குடும்பத்தினருக்குத் தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.




Sunday, August 6, 2023

வருடாந்தப் பொதுக் கூட்டமும், கோடை கால ஒன்றுகூடலும் - 2023


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்தப் பொதுக் கூட்டமும், கோடை கால ஒன்றுகூடலும் August 26, 2023, சனிக்கிழமையன்று இடம்பெறவுள்ளன. Neilson Road and Finch Avenue சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள Neilson Park இல் இந்நிகழ்வு இடம்பெறும். காலை 10 மணிக்கு காலை உணவுடன் ஆரம்பமாகும் இந்நிகழ்வு மாலை 6 மணி வரை இடம்பெறும்.
பொதுக் கூட்டம் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும். இந்த நேரத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உங்கள் ஆரோக்கியமான கருத்துகளைத் தெரிவித்து ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு உதவுமாறு உசன் மக்கள் அனைவரையும் அன்போடு வேண்டுகிறோம்.
ஒன்றுகூடலில் குழை சாதம், BBQ chicken, burger, hot dog, சுண்டல் முதலியவற்றோடு உங்கள் அனைவரினதும் அபிமானத்தைப் பெற்ற கொத்து ரொட்டியும் பரிமாறப்படும்.


அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. சிறப்பு விளையாட்டாக எமது பாரம்பரிய கயிறிழுத்தல் போட்டியும் இடம்பெறும்.
சிறுவர்களுக்கான சிறப்பம்சமாக வினோத உடைப் போட்டியும் (Fancy Dress competition) இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம். 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ,சிறுமிகள் இதில் பங்குபற்றிப் பரிசுகளைத் தட்டிச் செல்ல முடியும். பெற்றோர்களே இந்தப் போட்டியில் உங்கள் பிள்ளைகளும் கலந்து சிறப்பிக்க இப்போதே ஆயத்தங்களைச் செய்யவும்.


உசன் மக்களின் இந்த ஒன்றுகூடலில் கலந்து சிறப்பிக்குமாறு உசன் மக்களோடு அயற்கிராமத்து மக்களையும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்களையும் அன்போடு அழைக்கிறோம்.
வாருங்கள், வாருங்கள்! வந்து கலந்து மகிழ்ந்திருங்கள்!
நன்றி.
நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா