அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, September 22, 2024

துயர் பகிர்வு - ஆர்த்தி சுகுணேஸ்வரன்


அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆர்த்தி சுகுணேஸ்வரன் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை, September 22, 2024 அன்று New York இல் காலமானார்.

இவர் சுகுணேஸ்வரன் - சுசீலாதேவி ஆகியோரின் பாசமிகு மகளும்,

பண்டிதர் சரவணமுத்து - சின்னத்தங்கம் மற்றும் ஆசிரியர் சின்னத்துரை - செல்லம்மா ஆகியோரின் அன்பான பேத்தியும்,

வைத்திய கலாநிதி அர்விந்தின் பரிவான சகோதரியும்,

Britta வின் மைத்துனியும்,

சரோஜினிதேவி - இராமநாதர் ஆகியோரின் பெறாமகளும்,

வைத்திய கலாநிதி கணேசானந்தன் - வைத்திய கலாநிதி  தமயந்தி ஆகியோரின் மருமகளும் ஆவார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் மறைவால் துவண்டுபோயிருக்கும் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.

தகவல்

சரோஜினிதேவி - +1-416-606-6763
இராமநாதர் - +1-416-299-6763


Sunday, August 18, 2024

பரத நாட்டிய அரங்கேற்றம் - மாதுமை பற்குணரஞ்ஜன்


பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், நாட்டிய பூரணா, பரதகலா வித்தகர், நாட்டிய சிரோன்மணி ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவி மாதுமை பற்குணரஞ்ஜன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் சனிக்கிழமை, September 7, 2024 அன்று 5183 Sheppard Ave E, Scarborough, ON M1B 5Z5, ON, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Chinese Cultural Centre of Greater Toronto மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

மாலை 4:30 மணிக்கு சிற்றுண்டிகள் வழங்கப்படும்.  அரங்கேற்றம் சரியாக மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகும்.  

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு சியாமா தயாளன் அவர்கள் உசன் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்.

மாதுமைக்கு  வாழ்த்து கூறும் அதேவேளை இந்த அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறி மாதுமை நடன உலகில் பிரகாசிக்க உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்தி நிற்கிறது.  மாதுமையின் குரு சியாமா தயாளன் அவர்களின் கலைச் சேவையையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பாராட்டுகிறது.

The Bhaarati School of Indian Classical Dance personally invites you to grace your presence at the arangetram of Mathumai Patkunaranjan on September 7th, 2024 at the Chinese Cultural Centre. Mathumai has put a tremendous amount of effort for this performance and is excited to share the next step of her dance journey with you. It would be an honour to have the blessings of your presence on this auspicious day. 

Date and Venue:
Saturday, September 7th, 2024 at 5:30 pm
(Refreshments are served from 4:30 pm to 5:30 pm).
Chinese Cultural Centre of Greater Toronto 
5183 Sheppard Ave E, 
Scarborough, ON M1B 5Z5

United People Association of Usan in Canada wishes Mathumai for a blissful event and her continued success in the future! We also wishes her Guru Shiyama Thayaalan for her methodical teaching producing talented dancers.


Tuesday, May 7, 2024

துயர் பகிர்வு - செல்வி கமலேஸ்வரி வல்லிபுரம்

உசனைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வி கமலேஸ்வரி வல்லிபுரம் அவர்கள் செவ்வாய்க்கிழமை, May 7, 2024 அன்று இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் - வைரவிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, சிவபாக்கியநாதன், சிவசுந்தரம், நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், இராசையா, அன்னபூரணம் மற்றும் தவமணி, சிதம்பரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் புதன்கிழமை, May 8, 2024 அன்று யாழ் பிரதான வீதியில் உள்ள White House மலர்ச்சாலையில் நடைபெற்று பிற்பகல் 2 மணிக்கு பூதவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
மருமகன் சி. செல்வன்
மருமகன் சி. கேதீஸ்
+94 77 7834 603

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


Monday, April 29, 2024

"லய பரதம்"

பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி பெருமையுடன் வழங்கும் "லய பரதம்" நடன நிகழ்வு May 12th, 2024, ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக இடம்பெறவுள்ளது. 1785 Finch Ave W, Toronto, ON M3N 1M6, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் York Woods Library Theater இல் சரியாக மாலை 4 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும். சிற்றுண்டிகள் மாலை 3 மணியிலிருந்து 4 மணி வரை வழங்கப்படும்.
இந்த நிகழ்வு பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரத கலா வித்தகர், நாட்டிய பூரணா, திருமதி சியாமா தயாளன் அவர்களின் தயாரிப்பு, நெறியாள்கையில் இடம்பெற உள்ளது.
நாட்டியக்கலைஞர்களின் அதீத முயற்சியால் ஒரு பிரமாண்டமான நிகழ்வாக இது அமைகின்றது.
பிரபலமான பக்கவாத்தியக் கலைஞர்களின் பங்களிப்பு நிகழ்வை மேலும் சிறப்பிக்கும்.
இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு திருமதி சியாமா தயாளன் அவர்களும் லய பரதம் கலைஞர்களும் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர்.
இந்த நடன விருந்தில் கலந்து மகிழுமாறு உசன் மக்களை வேண்டிநிற்கும் அதே வேளை
"லய பரதம்" சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகின்றது.

Vanakkam,

Bhaarati School of Indian Classical Dance is delighted to invite you to LAYA BHARATHAM, on May 12th, 2024. The Laya Bharatham team would be honoured by your presence on the day of the performance.

Our dancers have put in a tremendous amount of effort to present this event.

Date and Venue:
Sunday, May 12th, 2024 at 4:00pm
(Refreshments are served from 3:00 pm to 4:00)
York Woods Library Theater
1785 Finch Ave W, Toronto, ON M3N 1M6

United People Association of Usan in Canada extends it's wishes to the talented artists and their guru Srimathi Shiyama Thayaalan and invites all Usan people to enjoy this showcase of dance.



Friday, April 26, 2024

துயர் பகிர்வு - சிவஸ்ரீ ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள்

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், Brampton, ON, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள் அவர்கள் 26-04-2024 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் உசன் கந்தசாமி கோவில் பிரதம குருவாகவிருந்த காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி குருக்கள் - சங்கரி அம்மா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிவஸ்ரீ முத்துக்குமாரசாமி ஐயர் ஐயாத்துரை குருக்கள் ஸ்ரீமதி சகுந்தலாதேவி (சந்திரி அம்மா) தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்ற சிவஸ்ரீ சிவசுந்தரசர்மா சுந்தரராச குருக்கள் மற்றும் ஸ்ரீமதி கல்யாணி அவர்களின் மருமகனும்,
ஸ்ரீமதி ஷர்மிளாவின் ஆருயிர்க் கணவரும்,
அபிஷா, அகஸ்தியா, அபூர்வா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பிரம்மஸ்ரீ அனந்த சர்மா, பிரம்மஸ்ரீ கோபி சர்மா, மற்றும் பிரம்மஸ்ரீ ஆதவன் சர்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணி வரை 8911 Woodbine Avenue, Markham, ON ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் 29-04-2024 திங்கட்கிழமை காலை 11:30 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று மாலை 4:00 மணியளவில் 1591 Elgin Mills East, Richmond Hill, ON இல் அமைந்துள்ள Elgin Mills Cemetery இல் தகனம் செய்யப்படும்.
அரிகரக் குருக்கள் அவர்களின் ஆன்மா இறைவன் திருப்பாதங்களைச் சேர உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.