அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, December 6, 2016

புதிய பரிமாணத்தில் "உசன் உறவுகள்"



உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடாந்தம் வழங்கும் உள்ளரங்க நிகழ்வான  "உசன் உறவுகள்" நிகழ்வு என்றுமில்லாதவாறு புதிய பரிமாணத்துடன் இந்தமுறை நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.  அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் எம்மவர்களின் நிகழ்ச்சிகளுடன் கனடாவின் முன்னணி தளவாத்திய இசைக்குழுவான RA Rhythm இசைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் உங்கள் அனைவரினதும் உள்ளங்களைக் கொள்ளைகொள்ள இருக்கின்றது.



எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு January மாதம்  21 ஆம் திகதி சனிக்கிழமை Baba Banquet Hall இல் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், கனடா வாழ் உசன் இளைய சமுதாயத்தினரின் இசைத் திறமை வெளிவர உள்ளது.  உசனை சேர்ந்த கனடா வாழ் பாடகர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக அவர்களுக்கு மேடையில் இசை வாத்தியங்களுடன் பாடும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.  உசன் பாடகர்களுடன் கனேடிய முன்னணிப் பாடகர்களும் இணைந்து இசை நிகழ்ச்சி மண்டபத்தை அமர்களப்படுத்த உள்ளது.



இந்த நிகழ்ச்சியில் இசைக்குழுவினரோடு சேர்ந்து பாட ஆர்வமுள்ளோர் தலைவர் பாஸ்கரனோடு தொடர்பு கொள்ளவும்.  முதலிலே குரல் வளம் பரீட்சிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவோர் இசைக் குழுவினரோடு சேர்ந்து பயிற்சி பெறுவார்கள்.  வழங்கப்படும் அத்தனை பயிற்சியிலும் கலந்துகொண்டு திறமையாகப் பாடுவோருக்கு "உசன் உறவுகள்" நிகழ்ச்சியில் பாடச் சந்தர்ப்பம் வழங்கப்படும்.  உங்கள் திறமையை வெளிப்படுத்த இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆர்வமுள்ளோர் சனிக்கிழமை, December 10 ஆம் திகதிக்கு முன்பு தொடர்புகொள்ளவும் அல்லது president@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியில் உங்கள் விருப்பதைத் தெரிவிக்கலாம்.



இசை நிகழ்ச்சியில் அதிக பாடல்களைச் சேர்த்துக்கொள்ளும் வகையில்  "உசன் உறவுகள்" நிகழ்வுக்கு மாலை 5 மணிக்கே வருகை தருமாறு அன்போடு வேண்டுகிறோம்.

இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்புவோர் பாஸ்கரனோடு தொடர்பு கொள்ளவும்.

நன்றி.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா




"USAN URAVUKAL"


The upcoming "USAN URAVUKAL", an annual event, proudly presented by United People Association of Usan in Canada will be an extravaganza event.  It will be entirely in a different format. You will be entertained to the ultimate.  This event will be at Baba Banquet Hall on Saturday, January 21, 2017.

With the performances of Usan people you will be thrilled to listen to the live music of "RA Rhythm", a leading Canadian music group.  Along with Usan singers, Canadian artists will be on the stage.



Anyone interested in singing in this event with live music, specially the younger generation, please contact to Baskaran, President of United People Association of Usan in Canada.  After the voice test, selected candidates will practice with the music group.  All those who participate in all the practice sessions and perform very well will be on the stage at "Usan Uravukal".  Please express your desire before the end of Saturday, December 10, 2016 via email at president@usan.ca



In order to accommodate as many songs as possible, please be present at the hall at 5 p.m. on January 21, 2017.

Well wishers who would like to sponsor this event, please contact Baskaran.

Thank you.

United People Association of Usan in Canada.




Sunday, December 4, 2016

உசன் பழைய மாணவர்களின்
"வாழும் போதே மதிப்பளிப்போம்"
சிறப்பு நிகழ்வு


1995 ஆம் ஆண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்விகற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பாடசாலைக்கு வழங்கும் சேவையைப் பின்பற்றி , 1995 ஆம் ஆண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் G. C. E. O/L  பரீடசைக்குத் தோற்றிய பழையமாணவர்கள் அனைத்துலகிலும் இருந்து இணைந்து உசன் பாடசாலையில்  ஒரு முன்மாதிரி நிகழ்வை நடத்தவுள்ளனர்.  

உசன் பாடசாலையில் கல்வி கற்பித்து ஓய்வுபெற்ற, இடமாற்றம் பெற்ற மற்றும் இயலாநிலையில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும், பல இடங்களிலும் சிதறி வாழும் வகுப்பு மாணவர்களையும் மீண்டும் உசன் பாடசாலைக்கு வரவழைத்து, ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களுக்கு வாழும் போதே மதிப்பளிக்கவுள்ளனர்.  தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிய  உணவு பரிமாறவுள்ளனர்.  அதைவிட உலகெங்கும் பரந்து வாழும் 1995 ஆம் ஆண்டு G. C. E. O/L  பரீடசைக்கு தோற்றிய பழையமாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்களை அன்பளிப்பாக வழங்கவுள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பழையமாணவர்களால் நடத்தப்படவிருக்கும் இந்த முன்மாதிரி சிறப்பு நிகழ்வு  பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெறும். பிரதம விருந்தினராக 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாடசாலை அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிபர் ஐ. வரதராஜா அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.  

நாட்டின் பலபகுதிகளிலும் வாழ்ந்துவரும் ஆசிரியர்கள் மீண்டும் உசனில் கூடவுள்ள இந்த நாளில் அனைத்துப்  பழைய மாணவர்களையும், பெற்றோர், நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து இந்த நிகழ்வைச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.  நீண்ட காலத்தின் பின்  முன்னாள் ஆசிரியர்களைச் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் பழைய நினைவுகளை இரைமீட்கும் ஒரு நல்ல சந்தர்ப்பமாக 
இருக்கப் போகும்  இந்த நிகழ்வை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

நன்றி 

1995 ஆம் ஆண்டு G. C. E. O/L  மாணவர்கள்.


Tuesday, November 29, 2016

உசன் பழைய மாணவர்களின் முன்மாதிரியான செயல்

1995 ஆம் ஆண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்விகற்ற பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து தற்போது தரம் 4 முதல் 13 வரை கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்குமுகமாக அவர்களுக்கு பொது உளச்சார்பு மற்றும் பொதுஅறிவு ஆகியவற்றில் பரீட்சை நடாத்தி பரிசளிப்பு நடத்தியுள்ளனர். இந்த முன்மாதிரியான செயலை அவர்கள் கடந்த வருடம் ஆரம்பித்தனர். தொடர்ந்தும் இந்த ஊக்குவிப்புப் பரீட்சைகளை அவர்கள் நடத்த உள்ளனர். இந்தப் பழைய மாணவர்களுக்கும், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களுக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

இந்த நிகழ்வில் பிடிக்கப்பட்ட சில படங்கள். நன்றி FaceBook - Usan RMV OldStudents


Wednesday, November 23, 2016

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
நிர்வாகசபை மறுசீரமைப்பு

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் நிர்வாகசபை கடந்த சனிக்கிழமை, November 19 ஆம் திகதி கூடியது. அப்போது நிர்வாகசபை மறுசீரமைப்புக் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. கடந்த ஆறு வருடங்களாகத் தலைமைப் பதவியில் இருந்து சிறப்பான நிர்வாகத்தை நடத்திய தலைவர் கனகசபை நகுலன் அவர்கள், தான் தொடர்ந்தும் தலைவராக இருப்பது சரியானதல்ல என்றும், புதியவர்களுக்கு இடம் கொடுப்பதன் மூலம் ஒன்றியம் புதிய, உத்வேகத்தோடு வீறுநடை போட முடியும் என்றும் கூறி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாகக் கூறினார். பலத்த வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் அவரின் இந்த முடிவை நிர்வாகசபை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது.

தலைவர்: சுப்பிரமணியம் பாஸ்கரன்
பிரேரித்தவர்: கனகசபை நகுலன்
வழிமொழிந்தவர்: சிதம்பரப்பிள்ளை வரதகுமார்

உபதலைவர்: நவரட்ணம் சிவகுமார்
பிரேரித்தவர்: சுப்பிரமணியம் பாஸ்கரன்
வழிமொழிந்தவர்: கனகசுந்தரம் அச்சுதன்

செயலாளர்:பிரியலதா சற்குணநாதன்
பிரேரித்தவர்: சரவணமுத்து பத்மகாந்தன்
வழிமொழிந்தவர்: சிதம்பரப்பிள்ளை தயாபரன்

உபசெயலாளர்: சாந்தினி சிவானந்தம்
பிரேரித்தவர்: கனகசபை நகுலன்
வழிமொழிந்தவர்: கனகசுந்தரம் அச்சுதன்

பொருளாளர்: கனகசுந்தரம் அச்சுதன்
பிரேரித்தவர்: சின்னத்துரை கருணாகரன் (கண்ணன்)
வழிமொழிந்தவர்: நவரட்ணம் சிவகுமார்

உபபொருளாளர்: கனகசபை நகுலன்
பிரேரித்தவர்: சிதம்பரப்பிள்ளை தயாபரன்
வழிமொழிந்தவர்: சரவணமுத்து பத்மகாந்தன்

பின்வருவோர் நிர்வாகசபை உறுப்பினர்களாகக் கடமையாற்றுவார்கள்:
சின்னத்துரை கருணாகரன்
சிதம்பரப்பிள்ளை வரதகுமார்
ஒப்பிலாமணி விஜயரூபன்
இராஜரட்ணம் உமாபதி
வெற்றிவேலு அஜந்தன்

பத்மகாந்தன் மற்றும் தயாபரன் இருவரும் தங்களின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உறுதி அளித்தனர்.

அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்தப் புதிய நிர்வாகசபை நல்ல முறையில் இயங்க உசன் மக்களின் ஆதரவை ஒன்றியம் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றது.

சுப்பிரமணியம் பாஸ்கரன்
தலைவர்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Tuesday, November 22, 2016

உசன் உறவுகள் 2016

அன்பார்ந்த உசன் மக்களே!

நீங்கள் உங்கள் உறவுகளையும், நட்புக்களையும் சந்தித்து மகிழும் நேரம் அண்மித்துக்கொண்டிருக்கிறது. உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு உற்சாகம் கொடுக்கும் ஓர் இரவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆடல், பாடல், அறுசுவை உணவோடு சிரித்திருக்கும் நேரம் அதிக தூரத்தில் இல்லை.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடந்தோறும் உசன் மக்களை ஒன்றுகூட்டி நடாத்தும் "உசன் உறவுகள்" நிகழ்வு 2017 ஆம் ஆண்டு January மாதம் 21 ஆம் திகதி, சனிக்கிழமை நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகிறோம். Middlefield Road மற்றும் McNicoll Avenue சந்திக்கு அருகாமையில் 3300 McNicoll Avenue எனும் முகவரியில் அமைந்திருக்கும் Baba Banquet Hall இல் இந்நிகழ்வு இடம்பெறும்.

நீங்கள் இதுவரை கண்டிராத வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்டு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. அனைத்து வயதினரும் மகிழ்ந்திருக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன. இந்த நிகழ்வில் உங்கள் திறமைகளையும் வெளிப்படுத்த ஒன்றியத்தின் செயலாளரோடு தொடர்பு கொள்ளுங்கள்.

பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் சரியாக மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.

எம் மத்தியில் இருக்கும் தொழில் அதிபர்களே, உங்கள் தொழிலை எம் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் அனுசரணை இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்கும். உங்கள் பங்களிப்பை வழங்க ஒன்றியத்தின் செயலாளரோடு தொடர்பு கொள்ளுங்கள்.

வெளிநாடு வாழ் உசன் மக்களே கனடாவின் குளிரை அனுபவிப்பதோடு, உங்கள் உறவுகள் அனைவரையும் ஒன்றுசேரச் சந்திப்பதற்கு இந்த நிகழ்வைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மறந்துவிடாமல் January 21ஆம் திகதியைக் குறித்துவைத்து, தவறாமல் "உசன் உறவுகள் 2016" நிகழ்வில் கலந்து மகிழுமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறது.