அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, January 21, 2020

திருமதி.சரஸ்வதி சுகுணபாலயோகன் அவர்களின் துயர் பகிர்வு


உசனை  சேர்ந்த முன்நாள் இ.போ.ச ஊழியர் திரு சுகுணபாலன் அவர்களின் அன்பு துணைவியார் திருமதி.சரஸ்வதி சுகுணபாலனன் அவர்கள் கனடாவில் காலமானார்.
 அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கந்தப்பு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கார்த்திகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

உசனை  சேர்ந்த முன்நாள் இ.போ.ச ஊழியர் திரு சுகுணபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஷோபனா, காலஞ்சென்ற புகழினி, தர்மேந்திரா, சுகந்தினி, பிரமேந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சண்முகநாதன், பிரமிளா, அகிலன், ரம்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தவமணி, பாலபரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்லத்துரை, சண்முகராஜா, லில்லி, ரதிமதி, பாலேந்திரா, பாலச்சந்திரன், ஜெயராணி, குலராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவன், கஜினா, கஷ்மிகா, கிஷானா, ஆதவன், அஸ்வினி, எர்ஸா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
கிரியை Get Direction
தகனம் Get Direction


தகவல்: குடும்பத்தினர்
 
யோகன் - கணவர்
 
ஷோபனா - மகள்
 
தர்மேந்திரா - மகன்
 
பிரமேந்திரா - மகன்
 
சுகந்தினி - மகள்


Thursday, January 16, 2020

தை திருநாளில் உசன் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அன்பளிப்பு

உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் 1990 ம் ஆண்டு A/L
வகுப்பில் கல்விகற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து.
தற்போது பாடசாலையில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட 40  மாணவர்களுக்கு 40 சோடி காலணிகளும்,80 காலுறைகளும், தரம் ஒன்று மாணவர்களுக்கு 15 புத்தகப்பை களும்15 காலுறைகளையும் மனமுவந்து அன்பளிப்பு செய்ததை ஈழத்தில் வாழும் பழைய மாணவர்களான ஆசிரியர் திரு சு. சிவனொளிச்செல்வன் , ஆசிரியர் திருமதி கோமதி மதுராகரன்,பிரதி அதிபர்  திரு இ.முருகதாஸ் ஆகியோரின் ஒழுங்கமைப்பிலும் வழங்கியுள்ளார்கள்.இவர்கள் அனைவருக்கும் எமது பாடசாலைச் சமூகம் நன்றியறிதலையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
1990 ல் உயர்தரத்தில் கல்வி கற்ற கனடாவாழ் பழைய மாணவர்களான திருமதி D.ரேவதி குடும்பத்தினர்(CANADA), திரு E.நகுலேஸ்வரன்(CANADA), திருமதி.p.பவானி  திரு A. நிரஞ்சன் , திரு M.அனேஸ்லி , திரு V. கருணாகரன்(CANADA)பழைய மாணவர்களான ஆசிரியர் திரு சு. சிவனொளிச்செல்வன் , ஆசிரியர் திருமதி கோமதி மதுராகரன்,பிரதி அதிபர்  திரு இ.முருகதாஸ் ஆகியோரின் ஒழுங்கமைப்பிலும் வழங்கியுள்ளார்கள்.
1990 ம்  ஆண்டில் உசனில் கல்விகற்ற இந்த பழைய மாணவர்கள் தற்போது உலகின் பல நாடுகளில் வாழுகின்ற போதும் அவர்கள் ஒன்றிணைந்து. மீண்டும் தமது பாடசாலையில் அக்கறை கொண்டு இந்த அன்பளிப்பை வழங்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உற்சாகம் வழங்கி உள்ளனர்.
இதே போன்று 1995 ம் ஆண்டு ஆண்டு 5 இல் கல்வி கற்ற பழைய மாணவர்கள் மற்றும் 1995 ல் O /L  கற்ற பழைய மாணவர்கள் தொடர்ந்து இவ்வாறான பணிகளை செய்து வருகின்ற போது .. இதை பின் பற்றி மற்றைய பழைய மாணவர்களும் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவி புரிய வேண்டுமென பாடசாலை சமூகம் எதிர்பார்க்கிறது .
இந்த அன்பளிப்பை வழங்கிய 1990 ம் ஆண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலையத்தில் A/L
வகுப்பில் கல்விகற்ற பழைய மாணவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்






Sunday, December 1, 2019

"உசன் உறவுகள்"
"Usan Uravukal"

கனடா வாழ் உசன் மக்கள் சார்பில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நடாத்தும் வருடாந்த குளிர் கால ஒன்றுகூடல் "உசன் உறவுகள்" நிகழ்வுக்கான நாள் குறிக்கப்பட்டுவிட்டது என்பதை மகிச்சியோடு அறியத் தருகிறோம்.

திகதி: சனிக்கிழமை, January 18, 2020.
நேரம்: மாலை 7 மணி.
இடம்: Baba Banquet Halls
3300 McNicoll Ave, Toronto ON M1V 5J6

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு ஒன்றிய உறுப்பினர்களையும், உசன் மற்றும் அயற்கிராம மக்கள், உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்நாள், இந்நாள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்க உங்களின் ஆலோசனைகளை வேண்டி நிற்கிறோம். உங்கள் ஆலோசனைகளை வழங்க தலைவர் சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களுடன் 647-448-7434 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது president@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும்.

இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள் வழங்க விரும்புவோர் ஒன்றிய செயலாளர் விஜயகுமாரி புஸ்பராஜா அவர்களுடன் 416-845-8795 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது secretary@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும்.

நிகழ்வுக்கான செலவு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஒன்றிய உறுப்பினர்களின் அங்கத்துவக் கட்டணம், உறுப்பினர்கள் அல்லாதோரிடமிருந்து பெறப்படும் அனுமதிக் கட்டணம் என்பன நிகழ்வை நடத்துவதற்குப் போதுமானதாக இல்லை. எனவே நிகழ்வுக்கு அனுசரணை என்பது நிச்சயமாகத் தேவைப்படுகிறது.  உசனைச் சேர்ந்த தொழில் வழங்குநர்கள் தம்மாலான நிதியை வழங்கி வந்தார்கள்.  கடந்த சில வருடங்களாக அதுவும் நின்றுவிட்டது.  அனுசரணையாளர்களை இதுவரை காலமும் நிர்வாகசபை உறுப்பினர்களே தேடிக் கண்டுபிடித்தார்கள். இந்த முறை ஒன்றிய உறுப்பினர்களையும் இந்தத் தேடலில் உதவுமாறு அன்போடு வேண்டி நிற்கிறோம். எத்தனையோ சேவை வழங்குநர்களிடம் நீங்கள் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்துகொள்கிறீர்கள். அவர்களை அனுசரணையாளர்களாக அழைத்து வரும் பொறுப்பை ஏற்குமாறு ஒன்றிய உறுப்பினர்களையும் மற்றும் உசன் மக்களையும் வேண்டி நிற்கிறோம். பார்வையாளர்கள் என்ற நிலையிலிருந்து பங்காளர்கள் என்ற நிலைக்கு மாறுமாறு வினயமாக வேண்டுகிறோம். உங்கள் அனுசரணையாளர்கள் பற்றிய தகவல்களைப் பொருளாளர் சரவணமுத்து பத்மகாந்தன் அவர்களிடம் 647-219 2027 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது treasurer@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கவும்.

உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு இந்த நேரத்திலே நன்றி கூறுகிறோம்.

காலநிலை எப்படியிருந்தாலும் நிகழ்வு இனிதே நடைபெறும். இந்த நாளை மறக்காது நீங்கள் மட்டுமல்ல உங்கள் உறவுகளையும், நட்புகளையும் அழைத்து வாருங்கள்.

ஒன்றாய் கூடி ஒருமித்து மகிழ்ந்திருப்போம், வாருங்கள்.

நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா.



Saturday, November 30, 2019

பரிசில் நாள் நிகழ்வு


உசன் இராமநாதன் மகா வித்தியாலய பரிசில் நாள் நிகழ்வு November 30 திகதி, சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. வித்தியாலய முதல்வர் மற்றும் பழைய மாணவர் சங்கம் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு புலம்பெயர் வாழ் பழைய மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்கி இந்த நிகழ்வைச் சாத்தியமாக்கினர்.

வித்தியாலய முதல்வர் க. சண்முகதாஸ் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக தென்மராட்சி வலய கல்வி அலுவலகத்தில் கல்வி அபிவிருத்தி பிரிவின் பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருக்கும் திருமதி சிவத்திரை சிவநாதன் அவர்கள் கலந்து கொண்டார். சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரியும், வித்தியாலயத்தின் பழைய மாணவருமான வைத்திய கலாநிதி சிவபாதம் சுதோகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இடைவிடாத மழை மற்றும் மின்வெட்டுக்கு மத்தியிலும் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசில் நாள் நிகழ்வு சாத்தியமாவதற்குக் காரணமாக இருந்த வித்தியாலய முதல்வர், பழைய மாணவர் சங்கம் மற்றும் நிதி உதவி வழங்கிய நலன்விரும்பிகள் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா தனது நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. பரிசு பெற்ற மாணவர்களையும் அது பாராட்டுகிறது.

























Saturday, November 16, 2019

ஐயாத்துரை கனகேஸ்வரி


திருமதி ஐயாத்துரை கனகேஸ்வரி அமரத்துவம் அடைந்துள்ளார்.
இவர் உசன் ஐயாத்துரை (மாத்தையா) அவர்களின் அன்பு துணைவியாராவர்.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.