அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, May 21, 2012

மரண அறிவித்தல்

உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், Yakwila, Sri Lanka மற்றும் Scarborough, Canada வை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுவாமிநாதர் இராசநாதன் (இளைப்பாறிய தோட்ட அதிகாரி Yakwila Estate) அவர்கள் 21.05.2012 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்ற சுவாமிநாதர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியைச் சேர்ந்த காலம்சென்ற செல்லப்பா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், அமரர் திருமதி அமிர்தாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், இந்திரனின் பாசமிகு தந்தையும், புஸ்பாவின் அன்பு மாமனாரும் ரொசேன் (Roshen), உதேஷ் (Udesh), நிமேஷ் (Nimesh) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலம்சென்ற விநாசித்தம்பி, சிவபாதசுந்தரம் (Canada), காலம்சென்ற புவனேஸ்வரி, தங்கராசா (London, UK), மகேஸ்வரன் (Canada), விமலேஸ்வரி (சாவகச்சேரி, இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலம்சென்றவர்களான இராசமணி, செல்லத்துரை, செல்வமணி, செல்வரத்தினம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரது பூதவுடல் 3780 Sheppard Avenue East, Scarborough, Canada இல் அமைந்துள்ள Highland Funeral Home இல் 27.05.2012, ஞாயிற்றுக்கிகிழமை மாலை 4 மணி முதல் 9 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள் காலை 10 மணி முதல் 12 மணிவரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, 256 Kingston Road, Scarborough, Canada (Woodbine & Kingston) இல் அமைந்துள்ள St. John's Norway Crematorium இல் பிற்பகல் 12:45 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு
இந்திரன் (மகன்) -416-264-8034 416-835-8147 (Cell)
மகேஸ்வரன்-416-430-0926
சிவபாதசுந்தரம்-416-431-4695
தங்கராசா-647-860-8034 (Cell)


Saturday, May 5, 2012

Summer Get Together 2012

The Summer get together of Usan people will be held on Sunday, July 22, 2012. The event organized by United People Association of Usan in Canada will be at Neilson Park in Scraborough, Canada. The closest intersection of this venue is Neilson Road and Finch Avenue.

United People Association of Usan in Canada cordially invites all people from Usan to attend this community event. People from the adjacent villages of Usan and old students of Usan Ramanathan Maha Viththiyalayam are also welcomed.

There will be sports for all ages. You can also enjoy very tasty foods. Children are encouraged to come prepared to participate in the Fancy Dress show and win fabulous prizes.

Please mark your calendars and keep July 22, 2012 free from any other events. Usan people who live outside of Canada, please make your travel plans accordingly.

It will be an amazing event, guaranteed.



உசன் உறவுகளின் கோடைகால ஒன்றுகூடல்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவால் வருடந்தோறும் நடாத்தப்படுகின்ற கோடைகால ஒன்றுகூடல் July 22, 2012 அன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இருக்கின்றது. Scarborough, Canada வில் Neilson Road and Finch Avenue சந்திக்கு அண்மையில் அமைந்திருக்கும் Neilson Park இல் இந்த ஒன்றுகூடல் நடைபெற இருக்கின்றது.

கனடாவாழ் உசன் மக்கள் மட்டுமல்ல உலகெங்கும் பரந்து வாழும் உசன் மக்களும் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்வாக இந்த ஒன்றுகூடல் மாறிவிட்டது. அயல் கிராமத்து மக்களையும், உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றவர்களையும் அரவணைத்துக் கொண்டு நடாத்தப்படுகின்ற இந்த நிகழ்வில் நீங்களும் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடும், உரிமையோடும் அழைக்கின்றது.

அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டிகளோடு அறுசுவை உணவும் உண்டு. சிறுவர்கள் வினோத உடைப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெறும் சந்தர்ப்பமும் உண்டு.

உங்கள் உறவுகளோடு கூடி மகிழ்ந்திட July 22, 2012 ஆம் திகதியை இப்போதே குறித்து வைத்துக்கொள்ளுங்கள். வெளி நாடுவாழ் உசன் மக்களே உங்கள் பிரயாண ஒழுங்குகளை இப்போதே செய்து கொள்ளுங்கள்.

வாருங்கள் அனைவரும். கூடுவோம்! குதூகலிப்போம்!!



Sunday, April 22, 2012

மரண அறிவித்தல்

சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், இலங்கை யக்வில மற்றும் கனடா Scarboroughவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி அமிர்தாம்பிகை இராசநாதன் அவர்கள் (21.04.2012) சனிக்கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், உசனைச் சேர்ந்த காலஞ்சென்ற சுவாமிநாதர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், இராசநாதன்(இளைப்பாறிய தோட்ட அதிகாரி-Yakwila Estate) அவர்களின் அன்பு மனைவியும், இந்திரன் அவர்களின் அன்புத் தாயாரும், புஸ்பாவின் அன்பு மாமியும், ரொசேன் (Roshen), உதேஷ் (Udesh), நிமேஷ் (Nimesh) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான இராசமணி, செல்லத்துரை, செல்வமணி, செல்வரத்தினம் ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்ற விநாசித்தம்பி, சிவபாதசுந்தரம்(Scarborough), காலஞ்சென்ற புவனேஷ்வரி, தங்கராசா(London, UK), மகேஸ்வரன்(Scarborough), விமலேஸ்வரி(சாவகச்சேரி) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 3280 Sheppard Avenue East, Toronto, ON M1T 3K3, கனடா என்ற முகவரியில் அமைந்துள்ள Highland Funeral Home & Cremation Centre இல் புதன்கிழமை (25.04.2012) மாலை 5 மணி முதல் 9 மணி வரை, இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டு, மறுநாள் காலை 10 மணி முதல் 12 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, 4570 Younge Street (Younge and Highway 401) Forest Loan ல் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்
குடும்பத்தினர்.

இந்திரன் — கனடா
தொலைபேசி: 1-416-264-8034
செல்லிடப்பேசி: 1-416-835-8147

மகேஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி: 1-416-430-0926

சிவபாதசுந்தரம் — கனடா
தொலைபேசி: 1-416-431-4695

அனுசா — கனடா
செல்லிடப்பேசி: 1-416-412-7834


Saturday, April 21, 2012

மரண அறிவித்தல்

திருமதி அமிர்தாம்பிகை இராசநாதன் அவர்கள் இன்று (சனிக்கிழமை, April 21, 2012) கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார் உசனைச் சேர்ந்த திரு சுவாமிநாதர் இராசநாதன் அவர்களின் அன்பு மனைவியும், விநாசித்தம்பி, சிவபாதசுந்தரம், மகேஸ்வரன், கமலாதேவி, விமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்பற்றி பின்னர் அறியத்தரப்படும்.

அன்னாரின் பிரிவால் துயருறும் கணவன் மற்றும் உறவினர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா, உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் ஆகியன தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றன.