அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, August 18, 2014

இறைபதம் எய்திய தகவல்

உசன் கந்தசுவாமி கோவில் பம்பரைக் குருக்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஐயாத்துரைக் குருக்கள் சந்திரி அம்மாவின் மகனும், ஹரி குருக்களின் சகோதரரும், உசன் கந்தசுவாமி கோவில் பிரதம குரு கேதீஸ்வரக் குருக்களின் மருமகனுமாகிய அசோக் குருக்கள் இந்தியாவில் இறைபதம் எய்திவிட்டார். மேலதிக தகவல் பின்னர் அறியத் தரப்படும்.

தகவல்:
சந்திரி அம்மா - 905-458-9990
ஹரி குருக்கள் - 416-989-9797


Sunday, August 3, 2014

கனடா/அமெரிக்கா வாழ் உசன் மக்களின் வருடாந்த ஒன்றுகூடல்



உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்தக் கோடை கால ஒன்றுகூடல் எதிர்வரும் August 31, 2014 அன்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருக்கின்றது. வழமைபோல Neilson and finch ,Scarborough, Canada வில் அமைந்திருக்கும் Neilson Park இல் நடை பெற இருக்கும் இந்த நிகழ்வுக்கு கனடா வாழ் மற்றும் அமெரிக்கா வாழ்  உசனையும் அதனைச் சூழவுள்ள கிராம மக்களையும் மற்றும் உசன் இராமநாதன் மகா வித்தியாலய ஆசிரியர்கள், பழைய மாணவர்களையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கின்றது.
உங்களின் உறவுகளோடும், நட்புகளோடும் மகிழ்ந்திருக்க இந்த நாளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறும். அத்தோடு பல் சுவை உணவு வகைகளும் பரிமாறப்படும்.
கனடாவுக்கு பயணம் செய்யவிருக்கும் உசன் உறவுகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கூடிய வகையில் வருகை தருவதை வரவேற்கிறோம் .


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் 







Tuesday, July 29, 2014

Dr.வே.பரமநாதன் அவர்களுக்கு கனடாவில் மதிப்பளிப்பு

உசனைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் புதல்வனும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவனுமாகிய வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்கள்டொரோண்டோ நகருக்கு வருகை தந்த வேளை அவருக்கு , உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா வாழ் உசன் மக்கள் சார்பாக நன்றி கூறியும் வாழ்த்துக்கள்  கூறியும் வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்களை கெளரவித்திருந்தது ,
எமது பாடசாலையான உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தின் ,சிறுவர் பாடசாலைகட்டிடம்,600,000.00)RS(ஏறத்தாள)பாடசாலைநூலகம்,11,00,000.00)rs(ஏறத்தாள) மற்றும் விளையாட்டு மைதான அபிவிருத்தி(நடை பெற்று கொண்டிருகிறது)மட்டுமன்றி கிராமத்தின் பல அபிவிருத்தி திட்டங்களை எமது கிராமத்துக்கு வழங்கிய சமூக சேவையாளன் ,
திரு பரமநாதன் அவர்கள் கனடா வாழ் உசன் மக்கள் சார்பாக இவரின் எமது கிராமத்தின் அபிவிருத்தி சேவையை பாராட்டியும் இங்கிலாந்தின் Hillingdon பிரதேசத்தின் ”GP of the Year 2010” என்னும் விருதைப் பெற்றதை கௌரவிக்கும் முகமாகவும் , இந்த நிகழ்வு நடைபெற்றது ,
வைத்திய கலாநிதி இந்திரன் ஆசிர்வாதம் அவர்கள் மங்களவிளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் ,
இன் நிகழ்வில் பலரின் கருத்துரைகளும் உசன் வரலாறு மற்றும் அபிவிருத்தியில் ஏற்பட்ட அனுபவங்களையும் பலரும் பரிமாறிக்கொண்டனர் 
அதை விட உசன் பாடசாலை மற்றும் நூலக கட்டிடபணிகளை செய்த கட்டிட ஒப்பந்த நிறுவன அதிபரும் தாயகத்தில் இருந்து வந்து  கலந்திருந்தார் ,
அவருக்கும் கெளரவம் வழங்கப்பட்டது , 
















Friday, July 11, 2014

ஒன்டாரியோ அரச சேவை விருது பெற்றார் உசன் பிரதிஷ்னி

 உசனைசேர்ந்த திரு, திருமதி நவரட்ணம் மகேஸ்வரி தம்பதிகளின் பேத்தியும்
திரு திருமதி மதீஸ்வரன் ரஜனி அவர்களின் மகளும்மாகிய  செல்வி பிரதிஷ்னி மதீஷ்வரன் அவர்கள் கனடா ஒன்டாரியோ மாகாண அரசின் வருடாந்த தொண்டர் சேவை விருதினை பெற்றுக்கொண்டார் . 50 க்கு அதிகமான அமைப்புக்களின் 230 தன்னார்வ தொண்டர்களுக்கு இவ் விருது வழங்கப்பட்டது , இதில் எமது உசன் கிராமத்தை சேர்ந்த இளம் தலை முறை 
"பல்துறை வித்தகி" செல்வி . பிரதிஷ்னி மதீஷ்வரன் அவர்களும் இந்த விருதை பெற்றுக்கொண்டது .அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விடையமாகும் ,
இவரின் திறமைக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் "பல்துறை வித்தகி" எனும் 
கெளரவம் வழங்குவதில் மகிழ்வு கொள்கிறது .

தமிழர் தகவல் சஞ்சிகை சார்பில் தெரிவு செய்யப்பட்ட செல்வி .பிரதிஷ்ணி ஒன்டாரியோ அரசின் சின்னம் பொறித்த பதக்கமும், மாகாண முதல்வர் ,மற்றும் குடிவரவு குடியகல்வு அமைச்சர் ஆகியோரின் வாழ்த்துக்களையும் ,சான்றிதழையும் பெற்றுக்கொண்டார் 
செல்வி பிரதிஷ்னி உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் சகல நிகழ்வுகளிலும் தனது கலை பணியை திறம்பட செய்து எமக்கும் தொண்டாற்றிவருபவர் ,அதை விட கனடாவின் 
முக்கிய சேவை நிலையங்களிலும் தனது தன்னார்வ பணியை திறம்பட செய்துவருபவர் ,
தனது சங்கீத அரங்கேற்றத்தை அண்மையில் நிறைவு செய்து பல இசை ரசிகர்களின் பாரட்டையும் பெற்ற செல்வி ,பிரதிஷ்னி மதீஷ்வரன்  டொரோண்டோ நகரில் பல இசை வகுப்புகளை நடாத்தி வருகிறார் ,
இவரின் திறமைக்கு மாகாண அரசு வழங்கிய விருதுக்காய் , இவரின் திறமைக்கும் 
உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .
இன்னும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ,

தகவல்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா



Wednesday, July 9, 2014

திருமண வாழ்த்து......



 உசனைச் சேர்ந்த பிரித்தானியா வாழ் வைத்தியர் திரு திருமதி வேலுப்பிள்ளை பரமநாதன் ஜெகந்திராதேவி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜெதீசன் அவர்களுக்கும், பிரித்தானியா வாழ் திரு திருமதி ஸ்ரீரங்கநாதன் மீரா தம்பதிகளின் செல்வப்புதல்வி, மிலோனி கண்ணம்மா அவர்களுக்கும் உசன் முருகன் திருவருளால் பெரியோர் முன்னிலையில் இன்று  ஜூலை மாதம் 9 ம் திகதி புதன்கிழமை, திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது ,

கனடா Toronto வில் 5321 Finch Avenue East, Scarborough ON M1S 5W2,Canada என்ற முகவரியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய்பாபா மண்டபத்தில், இன் விவாக நிகழ்வு நடைபெற்றது ,
திருமண  வாழ்வியலில் இணைந்து கொண்ட புதுமண தம்பதிகளுக்கு ,
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம் ,